Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பென்ஷன் முதல் ஆதார் அப்டேட் வரை.. நாளை முதல் மாறும் 7 ரூல்ஸ்.. மறந்து விடாதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை (நவம்பர் 1) முதல் ஆதார் அப்டேட், ஜிஎஸ்டி மாற்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்துக்கு மாறுவதற்கான விதிகள், வங்கி ரூல்ஸ்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த விதிகள் என்னென்ன பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

இன்றுடன் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது. நாளை நவம்பர் 1ம் தேதி. இந்நிலையில் தான் நாளை முதல் பல்வேறு விதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. அவ்வப்போது இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

aadhaar bank rules

அந்த வரிசையில் ஆதார் அப்டேட், வங்கி நாமினேஷஸ், ஜிஎஸ்டி மாற்றம் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆதார் அப்டேட்

குழந்தைகளுக்கான ஆதார் கார்டுகளுக்கான பயோமெட்ரிக் கட்டணம் ரூ125 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டணம் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு கிடையாது. இதனால் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு அப்டேட்டுகளை இலவசமாக மேற்கொள்ளலாம். அதேவேளையில் மற்றவர்களுக்கான பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவற்றின் மாற்றத்துக்கு ரூ.75 கட்டணமாக தொடர்கிறது. பயோமெட்ரிக் சார்ந்த அப்டேட்களான பிங்கர்பிரிண்ட் அல்லது கண்விழி அப்டேட்களுக்கான கட்டணம் ரூ.125 ஆக உள்ளது. அதேபோல் ஆதாரில் முகவரி, பிறந்த தேதி, பெயர் உள்ளிட்டவற்றை ஆவணங்கள் இன்றி ஆன்லைனில் திருத்தி கொள்ள முடியும்.

வங்கி நாமினேஷன் ரூல்ஸ்

நவம்பர் 1ம் தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான நாமினேஷன் விதியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஒரு கணக்கிற்கு 4 நாமினேஷன் வரை செய்யலாம். இது அவசர காலத்தில் நிதி மேலாண்மை செய்யும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் நாமினேஷன் செய்வது, நாமினேஷன் செய்யப்பட்டவர்களை நீக்குவதற்கான விதிகளில் எளிதாக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி ஸ்லாப் மாற்றம்

நாளை முதல் ஜிஎஸ்டியில் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதுவரை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகைகளில் ஜிஎஸ்டி போடப்பட்டது. ஆனால் நாளை முதல் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற 2 நடைமுறை நீக்கப்பட உள்ளது. மாறாக ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்களுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதம் விதிக்கப்பட உள்ளது.

ஓய்வூதிய திட்டத்தை மாற்ற..

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் ( National Pension System or NPS) இருந்து ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்துக்கு (Unified Pension Scheme or UPS) மாறுவதற்கான வாய்ப்பு நவம்பர் 30ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் பென்ஷன் திட்டத்தை மாற்றி கொள்ள நவம்பர் மாதத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆயுள் சான்று சமர்ப்பிக்க..

அதேபோல் ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை நவம்பர் மாத இறுதிக்குள் செய்ய வேண்டும். வங்கி கிளையின் வழியாகவோ அல்லது Jeevan Pramaan portal வழியாக ஆன்லைனிலோ அப்டேட் செய்யலாம். தவறும் பட்சத்தில் பென்ஷன் தொகை நிறுத்தப்படும் அல்லது தாமதம் செய்யப்படும்.

லாக்கர் கட்டணம் மாற்றம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கர் வாடகை கட்டணம் இந்தியா முழுவதும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய கட்டணம் என்பது லாக்கர் சைஸ் மற்றும் கேட்டகிரியை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு 30 நாள் இடைவெளியில் அந்த கட்டண நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஸ்பிஐ கார்டு ரூல்ஸ்

நாளை முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் கார்டு மூலமாக 3வது பார்ட்டி செயலிகளான MobiKwik மற்றும் CRED உள்ளிட்டவற்றின் வழியாக கல்வி சார்ந்த கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் கட்டணமாக பிடிக்கப்படும். அதேபோல் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி டிஜிட்டல் வாலட்டில் ரூ.1,000க்கு மேல் பயன்படுத்தும்போதும் 1 சதவீதம் கட்டணமாக பிடிக்கப்படும். இப்படியாக நாளை முதல் வங்கி, ஆதார், பென்ஷன் திட்டம் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+