Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை தொடக்கூடாத இடத்தை 'டச்" பண்ணிட்டாரே.. ஆக்கிரோஷமடைந்த அதிமுகவினர்! அம்மா டூ அண்ணா சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு இல்லாமல் சுமூகமாக சென்று இருந்த நிலையில், அண்ணா குறித்த பேச்சால் மீண்டும் இரு தரப்பு மோதலை தொடங்கி வைத்து இருக்கிறார் அண்ணாமலை. இதற்கு முன்பும் அதிமுக தலைவர் ஒருவரை அண்ணாமலை விமர்சித்ததே மோதலுக்கு காரணமாக இருந்தது. இரண்டையும் அலசுவோம்.

திராவிடக் கொள்கையையும், அதற்கு நேரெதிரான வலதுசாரி கொள்கையும் ஒன்றாக கூட்டணி அமைத்தால் என்னவெல்லாம் பிரச்சனை வருமோ, அவை அனைத்தும் அதிமுக, பாஜக கூட்டணியில் வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்ட கட்சி என அதிமுகவும், மத்தியில் ஆள்கின்ற கட்சி என பாஜகவும் பெருமைபேசி, யாரு பெருசு என அடிச்சுக்காட்டு என்ற வடிவேலு வசனத்திற்கு ஏற்ப அவ்வப்போது முட்டிக்கொள்கிறார்கள்.

 From Amma to Anna - Annamalai speech against ADMK leaders

அதன் பின் டெல்லியின் தலையீட்டுக்கு பின் அண்ணன் - தம்பிபோல் இணைந்துவிடுகிறார்கள். மீண்டும் அடுத்த சில மாதங்களில் மோதல் வெடித்து, மீண்டும் டெல்லி தலையிட்டு பிரச்சனையை தீர்க்கிறது. இப்படிதான் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி சென்றுகொண்டு இருக்கிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக பெரிய அளவில் உரசல்கள் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அண்ணா தொடர்பாக அண்ணாமலை பேசிய பேச்சால் மீண்டும் மோதல் வெடித்து இருக்கிறது. கடந்த வாரம் சென்னையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆற்றிய உரை அதிமுகவினரை கொதிப்படைய வைத்து உள்ளது.

"கடந்த 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரை கடவுளை கிண்டல் செய்ததால் முத்துராமலிங்க தேவர் கோபமடைந்து, இனி கடவுளை யாராவது கேலி செய்தால் ரத்தத்தில் மீனாட்சியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் என எச்சரித்தார். இதன் காரணமாக அறிஞர் அண்ணாமலை முத்துராமலிங்க தேவருக்கு பயந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு சென்னைக்கு வந்துவிட்டார்." என்று கூறியுள்ளார்.

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். மதுரை அதிமுக கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல், "பித்து பிடித்ததைபோல் ஒருவர் பேசுகிறான்.

இறந்த தலைவர்களை இழிவாக பேசுபவன் இழிபிறவிதான். ஆளுங்கட்சி என்ற திமிரில் நீ இருக்கலாம். அண்ணா பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு துண்டாக்கப்படும். அப்படிப்பட்ட கொள்கை மறவர்களே இங்கு உள்ளோம். அண்ணா கட்சி தொடங்காவிட்டால் இன்று குப்பனும் சுப்பனும் அமைச்சராகி இருக்க முடியுமா? அவரை பற்றி இழிவா பேசுறியே. உன் நாக்கு அழுகிப் போகும்." என்று கடுமையாக பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "அண்ணாமலை மறைந்த தலைவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அண்ணாமலை பாஜகவை வளர்ப்பதற்காக மறைந்த தலைவர்களை பற்றி அவதூறு பேசக்கூடாது. அறிஞர் அண்ணா உலகத் தமிழர்களால் போற்றப்படும் உன்னத தலைவர். அண்ணா புகழுக்கு களங்கம் கற்பிப்பது ஏற்க முடியாது." என்றார்.

இதற்கு முன் அதிமுக முன்னாள் தலைவரும் மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவை பற்றி பேசியதால் அதிமுகவினரின் கண்டனத்திற்கு ஆளானார் அண்ணாமலை. கடந்த ஜூன் மாதம் தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், "தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழலில் ஈடுபட்டன.

மக்கள் பணத்தில் முறைகேடு செய்த எல்லா கட்சிகளையும் சொல்கிறேன். இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும். இங்கு நடைபெற்ற எல்லாமே ஊழல் ஆட்சிகள்தான். ஊழல் செய்ததால் முன்னாள் முதலமைச்சரே தண்டிக்கப்பட்டு உள்ளார்." என்று தெரிவித்தார். இவர் ஜெயலலிதாவையே இவ்வாறு கூறியதாக பலரும் கண்டித்தனர். அவருக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+