Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபாஸ்டாக் முதல் ஆதார் கார்டு வரை.. நாளை முதல் வர போகும் அதிரடி மாற்றங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபாஸ்டாக் கார்டு முதல் ஆதார் கார்டு வரை விதிமுறைகளில் நாளை முதல் மாற்றங்கள் வருகின்றன.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டுகளின் போதும் சில மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் புதிய நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வருமான வரி சம்பந்தமான மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

From April 1 there are changes in the rules from fastag to Aadhar card

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வருமான வரி நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன. வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் புதிய வரி முறையில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய நிதியமைச்சகம் புதிய வரி முறையை டீஃபால்ட்டாக தேர்வாக்குகிறது.

தனி நபர் பழைய வரி முறையில் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்தால் வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை. அது போல் புதிய வரி ஸ்லாப்பில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வரும் 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், ரூ 6 லட்சம் முதல் ரூ 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ 9 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு 15 சதவீத வரியும், ரூ 12 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

பழைய வரி முறையில் மட்டுமே இருந்த standard deduction ரூ 50000 என்பது தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். ரூ 5 கோடிக்கு மேல் உள்ள வருமானத்திற்கு விதிக்கப்படும் சர்சார்ஜ் எனப்படும் அதிகபட்ச கூடுதல் வரியானது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தர்களுக்கு வரி சுமையை குறைக்கும்.

ஏப்ரல் 1, 2023 அல்லது அதற்கு பிறகு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை மொத்த ப்ரீமியம் ரூ 5 லட்சத்தை தாண்டினால் அந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

அது போல் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆம் தேதியாகும். இந்த தேதிக்குள் உங்களுடைய பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்படும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அதன் படி நாளை 1 ஆம் தேதி முதல் புதிய சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால் தற்போது லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மார்ச் மாத விலையே நீடிக்கும்.

நாளை முதல் புதிய நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் வருகிறது. புதிய விதியின் கீழ் பென்சன் திட்ட கணக்கில் உள்ளே செல்ல இரு காரணி அங்கீகாரம் தேவைப்படும் (2 factor authentication). சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் செல்போனில் பெறப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்ணை கொண்டு உள்ளே நுழைய வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ஏப்ரல் 1க்கு பிறகு வாடகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இது சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 வரை பொருந்தும்.

புதிய நிதியாண்டில் தொடங்கும் பிஎஃப் திட்டத்தில் வேறு நிறுவனத்திற்கு மாறி உங்களின் பழைய பிஎஃப ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். வேறு வேலைக்கு சென்றால் பிஎஃப் தொகையை மாற்ற கோர தேவையில்லை. அது தானாகவே மாறிவிடும்.

அது போல் ஃபாஸ்டாக் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை வங்கியில் இருந்து நீங்கள் புதுப்பிக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் அந்த கார்டுகள் வங்கியால் முடக்கப்படும். இதனால் கார்டில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+