புஸ்ஸி ஆனந்த் டூ அருண்.. இரண்டாம் கட்ட தலைவர்களை.. கூண்டோடு நீக்கும் விஜய்? தவெக மாறுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உள்ள புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்று நடிகர் விஜய் திட்டமிட்டு வருகிறாராம்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகிவிட்டனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார்.

TVK Vijay

இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கரூர் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது பொதுச்செயலாளர் கடமை. ஆனால் அதே புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரங்களை எதிர்கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார். அவரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த மனுவிற்கு எதிராக மேல்முறையீடு இன்னும் செய்யப்படவில்லை.

கரூர் சம்பவம் நடந்த அன்று திருச்சி பைபாஸில் அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் போனை ஆன் செய்யவில்லை. அப்படியே தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்து அவர் ஏற்காடு சென்றதாக நிறைய தகவல்கள் கூறுகின்றன. அங்கே ரிசார்ட் ஒன்றில் அவர் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது.அதன்பின் அவர் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டிற்கு ஓடிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. அவர் வங்கக்கடலில் கப்பல் ஒன்றில் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயம்

இன்னொரு பக்கம் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளார். இது போக ராஜ் மோகன், ஜான் ஆரோக்கியசாமி, அருண் ஆகிய தலைவர்களும் தலைமறைவாகி உள்ளார். லயோலா மணி சில போஸ்டுகளை போட்டாலும் அதை டெலிட் செய்து கட்சிக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

கலவரத்தை தூண்டும் விதமாக போஸ்ட் செய்த ஆதவ் அர்ஜுனா தற்போது டெல்லியில் இருக்கிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அவரை சும்மா விடக்கூடாது. அவரை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற பென்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்சி அல்லோகலப்பட்டு உள்ளது

இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சி மொத்தமாக அல்லோகலப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம்.

இதனால் இரண்டாம் கட்ட தலைவர்களை மொத்தமாக நீக்க விஜய் திட்டமிட்டு வருகிறாராம். அதாவது புஸ்ஸி ஆனந்த் உட்பட எல்லோரையும் நீக்கலாம் என்று விஜய் நினைக்கிறாராம். இவர்கள் கட்சியில் பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் உடன் நிற்காமல் தலைமறைவாகிவிட்டனர். அதனால் தனக்கு விசுவாசமாக இருக்கும் தலைவர்களை மட்டுமே கட்சிக்குள் எடுக்க வேண்டும்.

மற்றவர்கள் வேண்டாம் என்ற திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். தன்னுடன் நெருக்கமாக நீண்ட காலமாக நட்பாக இருக்கும் சில அரசியல் நண்பர்களை கட்சிக்குள் கொண்டு வரலாம். இனியும் இவர்களை நம்பி இருக்க வேண்டாம் என்ற திட்டத்தில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+