7 நாட்களில்.. 3 எதிர்பார்க்காத அறிவிப்புகள்.. விடாமல் அடித்து ஆடும் மோடி.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை; லோக்சபா தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. வரிசையாக 3 அறிவிப்புகளை கடந்த 1 வாரத்தில் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
முதல் கட்டமாக கடந்த வாரம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர உள்ளது, மேலும் இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 1: இந்தியாவில் தற்போது பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது. அதாவது ஒரு பொருள் 1 ரூபாய்க்கு விற்கிறது என்றால் போக போக அதன் விலை 4 சதவிகிதம் வரை உயரும். அடுத்த வருடம் பெரும்பாலும் அந்த பொருளின் விலை 4 ரூபாயாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். அகவிலைப்படி உயர உயர சம்பளம் உயர வேண்டும். பொதுவாக பணவீக்கம் எவ்வளவு இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்தே ஹைக் இருக்கும். அதாவது பணவீக்கம் 5 சதவிகிதம் என்றால் பெரும்பாலும் ஹைக்கும் 5 சதவிகிதம் இருக்கும். அப்படி உயர்ந்தால் மட்டுமே மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பொருட்களை வாங்க முடியும்.
இந்த விலை உயர்வை சமாளிக்க தனியார் ஊழியர்களுக்கு வருடா வருடம் ஹைக் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அறிவிப்பு 2: தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த வாரம் மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ 100 குறைப்பு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில் அது இன்று முதல் அறிமுகமாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கொண்டுதான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒன்று ரூ 1,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ 918.50 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது 100 ரூபாய் குறைக்கப்பட்டு 818.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அறிவிப்பு 3: இந்த நிலையில் தற்போது சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஒன்றிய அரசு!
2019ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை
எதிர்ப்பு ஏன்?: குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது
எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்












Click it and Unblock the Notifications