ஜார்கண்டில் சம்பளம் 60 ரூபாய்.. தமிழ்நாட்டிலோ 400 ரூபாய்.. வட மாநிலத்தவர்கள் வரத்தானே செய்வார்கள்!
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுப்பது ஏன் என விளக்குகிறார் பொன்குமார்.
சென்னை: நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதை அண்மைக் காலமாக அதிகம் பார்க்க முடிகிறது.
சென்னை, திருப்பூர், அவிநாசி, கோவை, அம்பத்தூர், கிண்டி, திருப்பெரும்புதூர் போன்ற பல இடங்களில் தமிழ் தொழிலாளிகளுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகின்றனர் வடமாநிலத் தொழிலாளர்கள்.
ஆரம்பக்காலங்களில் கட்டுமானத் தொழிலில் மட்டும் சித்தாள் பணியை மேற்கொண்டு வந்த வட மாநிலத்தவர்கள் இன்று வயலில் இறங்கி நாற்று நடும் வரை தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டின் உயர்கல்வி விழுக்காடு அதிகம் இருப்பதால், படிப்புக்கேற்ற வேலையை தேடிக்கொண்டு பலரும் செட்டிலாகிவிடுகின்றனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள்
கட்டிடப் பணி சித்தாள், பானிப்பூரி கடை, சைனீஸ் உணவு மாஸ்டர், ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுதல், பஞ்சுமிட்டாய் விற்பனை, மில்களில் வேலை, பெட்ஷீட் விற்பனை, சாலையோர சாத்துக்குடி ஜூஸ் கடை, என தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் வடக்கர்கள் நிறைந்திருக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஜார்கண்ட், பீகார், ஒரிஸா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு படையெடுக்கிறார்கள்.

பொன்குமார்
இவர்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள், அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஒன் இந்தியா தமிழிடம் விவரிக்கிறார் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார். அதன் விவரம் வருமாறு,'' இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரத்திலும், கல்வியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களில் உயர்கல்வி விழுக்காடு 28% என்றால் தமிழ்நாட்டின் உயர்கல்வி விழுக்காடு 51%. படித்தவர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலையை தேடிக்கொள்கிறார்கள்.பலர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு பணியாற்ற சென்றுவிடுகிறாகள். அதில் தவறேதும் இல்லை.''

60 ரூபாய் கூலி
''இதனிடையே இங்கு கட்டுமானப் பணி உட்பட பல பணிகளுக்கு ஆட்பற்றாகுறை உருவாகிறது. ஜார்கண்டில் ஒரு நாளைக்கு வெறும் ரூ.60 சம்பளம் கொடுக்கிறார்கள். இங்கு ரூ.400 கூலி கிடைப்பது அவர்களை பொறுத்தவரை மிகப்பெரிய தொகையாக கருதுகிறார்கள். இதனால் தான் தமிழ்நாட்டை நோக்கி சாரை சாரையாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். கட்டுமானப் பணிகளுக்காக மட்டுமே ஆரம்பத்தில் தமிழ்நாடு வந்தவர்கள் இன்று வயல்களில் நாற்றுநடும் வரை வந்துவிட்டார்கள். இதனால் நம்ம இடத்தை வடக்கர்கள் பிடித்துவிட்டார்களே என்ற உணர்வு தமிழ்நாட்டில் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.''

கலாச்சார கலப்பு
''தமிழ்நாட்டில் கலாச்சார கலப்பு, பண்பாட்டு கலப்பு, மொழி கலப்பு ஏற்படுகிறது. இதனாலும் வடமாநிலத்தவர்கள் மீது எதிர்ப்பு உணர்வு வருகிறது. மேலும், ஒரு சில இடங்களில் வட மாநிலத்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மறுப்பதற்கில்லை. இதனால் வட மாநில தொழிலாளர்களை ஹேண்டில் செய்வது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. கவனக் குறைவாக இருந்தோம் என்றால் அதனால் பிரச்சனைகளும் வரலாம். இப்போது நாங்க என்ன செய்கிறோம் என்றால், வட மாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் எத்தனை பேர் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை கணக்கெடுக்க உள்ளோம். அவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க உள்ளோம்.

விவரம் சேகரிப்பு
''இதைப்போல் வட மாநிலத்தவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்கும் பட்சத்தில் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்பதோடு அவர்களுடைய முழு விவரமும் அரசு கையில் இருப்பதால் அவர்களுக்கும் தவறிழைத்துவிட்டு தப்பிச் செல்ல முடியும் என்ற எண்ணம் உருவாகாது.'' இவ்வாறு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் தெரிவிக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications