கோபம் அடைந்த ஸ்டாலின்.. போன் செய்து பேசிய மூத்த தலைகள்.. ஒரே இரவில் மனம் மாறிய கே எஸ் அழகிரி!
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் நேற்று திமுகவிற்கு எதிராக பேசிவிட்டு, இன்று காலை மீண்டும் திமுகவை ஆதரித்து பேசினார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று திமுகவிற்கு எதிராக பேசிவிட்டு, இன்று காலை மீண்டும் திமுகவை ஆதரித்து பேசினார். திமுகவுடன் எந்த சண்டையும் இல்லை என்று குறிப்பிட்டார். நேற்று ஒரே இரவில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி நேற்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் திடீர் என்று இன்று மீண்டும் பேட்டி அளித்த கே. எஸ் அழகிரி, திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை.எப்போதும் போல திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. நேற்று பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

என்ன கூறினார்
இப்படி ஒரே இரவில் கே எஸ் அழகிரி மனம் மாறி இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. நேற்று மாலைதான் திமுகவுடன் கூட்டணி உடைவது போல பேசினார். இன்று காலை மொத்தமாக மனம் மாறி இருக்கிறார். நேற்று பேசியது மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும் கூட கூறி உள்ளார்.

கோபம்
அப்படி என்னதான் ஒரு இரவில் நடந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சண்டை தொடர்பாக நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் உடன் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்பிக்கள் ஸ்டாலின் உடன் கோபமாக பேசி இருக்கிறார்.

என்ன குற்றச்சாட்டு
இவர்களிடம் ஸ்டாலின் கே எஸ் அழகிரி குறித்து குற்றச்சாட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் கூட்டணியை முறித்துக் கொள்வோம். பிரச்சனை எங்களுக்கு கிடையாது. உங்களுக்குத்தான். எங்களுடன் கூட்டணி வைக்க நிறைய கட்சிகள் இருக்கிறது என்று ஸ்டாலின் கோபமாக பேசி இருக்கிறார்.

என்ன பேட்டி
இதற்கு பிறகுதான் ப. சிதம்பரம் இன்று காலை பேட்டி அளித்தார். நாங்கள் கூட்டணிக்கு எதிராக பேசவில்லை. நாங்கள் திமுகவை மிரட்டவில்லை. நாங்கள் நியாயமாகத்தான் பேசுகிறோம். எங்களுக்கு இடம் கேட்க உரிமை இருக்கிறது. அதை வெளிப்படையாக கேட்டு இருக்கிறோம் என்று ப. சிதம்பரம் திமுகவை சமாதானம் செய்தார்.

மூத்த தலைகள்
ஆனால் இது திமுக தரப்பை சமாதானம் செய்யவில்லை. பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம். நாம் தனியாக இருக்கலாம் என்று கூறி உள்ளனர். இந்த சண்டை எல்லாம் நேற்று இரவு காங்கிரஸ் தேசிய தலைமையின் காதுக்கு சென்றுள்ளது. அவர்கள் நேற்று கே எஸ் அழகிரியுடன் காங்கிரஸ் தேசிய தலைமை பேசியதற்காக கூறப்படுகிறது.

என்ன அறிவுரை
நேற்று கே எஸ் அழகிரிக்கு முக்கிய தலைவர்கள் இப்படி அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால் காலையில் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் குற்றச்சாட்டு வைக்கவில்லை. சொல்ல வேண்டிய சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டோம் என்று கூறி கே எஸ் அழகிரி சமாதானம் செய்துள்ளார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி!












Click it and Unblock the Notifications