ஆதார் கார்டுதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி..ஒரு கெட்ட செய்தி! நவம்பர் 1 முதல் வரும் புது ரூல்ஸ்! என்ன?
சென்னை: ஆதார் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு நவம்பர் 1 முதல் ஒரு பெரிய மாற்றம் அமலுக்கு வருகிறது. இனி ஆதார் தகவல்களில் திருத்தம் செய்ய ஆதார் சேவை மையங்களுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலிருந்தே உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதே நேரத்தில் சில சேவைகளுக்கு சேவைக் கட்டணத்தில் மாற்றம் செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டை என்பது தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டை, இது இந்திய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் சேவைகளில் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
ஆதார் என்றால் "ஆன்டிஃபிகேஷன் யூனிக் ஐடென்டிட்டி (AADHAAR)" என்பதை குறிக்கிறது. இந்த அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பயோமேட்ரிக் தகவல்கள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் இதை பெற முடியும்.

ஆதார் திருத்தம்
ஆதார் அட்டை திட்டத்தை 2009 ஆம் ஆண்டில் மத்திய அரசு UIDAI (Unique Identification Authority of India) மூலம் அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை எளிதாக அணுகும் வகையில் தனித்துவ அடையாளத்தை வழங்குவதற்காகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை பல்வேறு முக்கிய சேவைகளில் கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் பேங்கிங், பாஸ்போர்ட், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மொபைல் சிம் பதிவு, பண பரிவர்த்தனை மற்றும் புகைப்பட அடையாளம் போன்றவை அடங்கும்.
ஆன்லைன் ஆதார்
இந்நிலையில், தார் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு நவம்பர் 1 முதல் ஒரு பெரிய மாற்றம் அமலுக்கு வருகிறது. அதாவது, முன்பு ஆதார் தகவலில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் அருகிலுள்ள சேவை மையத்துக்குச் சென்று நேரில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. பலருக்கும் இது நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையாக இருந்தது. ஆனால் இனி UIDAI அறிமுகப்படுத்திய புதிய ஆன்லைன் வசதி மூலம் சில நிமிடங்களில் வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம்.
பயோமெட்ரிக் புதுப்பிப்பு
உங்கள் பெயர் அல்லது முகவரி போன்ற தகவல்களை மாற்றும்போது, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்களுடன் தானாகவே சரிபார்க்கப்படும். இதனால் தவறான தகவல்கள் பதிவாகும் அபாயம் குறையும். மேலும் இந்த ஆன்லைன் செயல்முறை பாதுகாப்பாகவும் வேகமாகவும் செயல்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் கட்டண உயர்வு
அதே நேரத்தில் ஆதார் சேவைகளுக்கான கட்டணங்களும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணை மாற்ற ரூ.75 வசூலிக்கப்படும். கைரேகை, கண் ஸ்கேன் அல்லது புகைப்படத்தை மாற்ற ரூ.125 கட்டணம் இருக்கும். 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம். 2026 ஜூன் 14 வரை ஆன்லைனில் ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அதன் பிறகு ரூ.75 கட்டணம் செலுத்தி சேவை மையத்தில் புதுப்பிக்க வேண்டும். ஆதார் கார்டை மீண்டும் அச்சிட கோரிக்கை விடுத்தால் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.
பயோமேட்ரிக் திருத்தம்
குறிப்பாக வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முதல் நபருக்கு ரூ.700, அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு இது பெரும் வசதியாக இருக்கும். அதே சமயம், ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், 2026 ஜனவரி 1 முதல் அவர்களின் பான் கார்டு செயலிழக்கும். இதனால் வரி மற்றும் வங்கி தொடர்பான பணிகளில் அதை பயன்படுத்த முடியாது.
பான்-ஆதார்
புதிய விதிமுறைகளின் மூலம் KYC சரிபார்ப்பும் எளிதாக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஆதார் OTP, வீடியோ KYC அல்லது நேரில் சரிபார்ப்பு மூலம் பணிகள் செய்ய முடியும். இதனால் காகித ஆவணங்கள் தேவையில்லை, நேரமும் மிச்சப்படும். மொத்தத்தில், இந்த புதிய ஆதார் விதிமுறைகள் மக்களுக்கு மிகுந்த வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும். இனி ஆதார் திருத்தம் செய்ய மையங்களுக்கு அலைய வேண்டியதில்லை; சில நிமிடங்களில் வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக செய்து முடிக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications