Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் காலங்களில் காவல்துறையில் உயர் பதவியில் உள்ளவர்களைத் தேர்தல் ஆணையம் ஏன் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து உத்தரவிடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியிலிருந்து அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். குறிப்பாகத் தேர்தல் காலங்களில் காவல்துறை உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் அவர்களைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடும்.

From Police to MLA Why Does the Election Commission Transfer Police Officers Do You Know

அவ்வாறே இப்போது தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சில அதிகாரிகளை மாற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல்துறை ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டு அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 53 காவல் ஆய்வாளர்கள் சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இத்துடன் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை முடிந்துவிடவில்லை. வேறு சில அதிகாரிகளையும் வரும் தேர்தலுக்கு மாற்றி உத்தரவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே சில அதிகாரிகள் கூறுகின்றனர். அது சரி? ஏன் தேர்தல் காலங்களில் இப்படி அதிகாரிகள் திடீர் திடீரென்று மாற்றம் செய்யப்படுகின்றனர்? இதற்குப் பின்னால் உள்ள சட்டச்சிக்கல் என்ன? அதைப் பற்றி ஒரு வாக்காளராக நமக்கு விழிப்புணர்வு இருப்பது அவசியம்.

பொதுவாக 5 ஆண்டுகாலம் ஒரு அரசியல் கட்சியின் கீழாகவே அத்தனை அரசு ஊழியர்களும் பணி செய்து பழக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களில் சிலர் ஆளும் கட்சியின் தயவால் பதவிக்கும் வந்திருக்கக்கூடும். அல்லது அவர்களின் குடும்ப பின்புலம் ஒரு கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கலாம். இப்படியான அதிகாரிகள் உயர் பொறுப்பில் இருக்கும் போது அங்கே நடுநிலை பேணப்படுமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

ஆகவே, அந்த அரசு ஊழியரை 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க முடியாது. ஒரு அதிகாரி ஒரு கட்சியின் ஆட்சிக்காலத்தில் நெருக்கமாகச் செயல்பட்டார் எனத் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் கிடைக்கும் பட்சத்தில் சந்தேகத்திற்கு உள்ளான அதிகாரி அதிரடியாக மாற்றப்படுவார். அதற்காகவே தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றுகிறது. தேர்தல் ஜனநாயகத்தில் நடுநிலையும் நம்பகத்தன்மையும் மிகமிக முக்கியமானது. அதற்குள் ஒரு ஓட்டை விழுந்தால் தேர்தல் நடத்தை விதிகள் சிதையக்கூடும். ஆளும் கட்சிக்கோ அல்லது வேறு கட்சிக்கோ ஆதரவாக அவர்கள் செயல்படக் கூடும். அந்த வழியை அடைப்பதற்காகவே அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்கிறது.

ஆர். நட்ராஜ் ஞாபகம் இருக்கா?

அப்படிக் கடந்த காலங்களில் சில முன்மாதிரியான உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன. சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஆர்.நட்ராஜ் 2006 ஆண்டு பதவி வகித்து வந்தார். அப்போது மகளிர் தின விழாவை ஒட்டி, அவர் ஆற்றிய உரை சர்ச்சையை உண்டாக்கியது. அதாவது, "பெண்கள் அனைவரும் ஜெயலலிதாவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அவர் ஒரு ஐடியல் லேடி. அவரை பெண்கள் 'ஐகான்' ஆகக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்" என்று பேசியிருந்தார்.

அவர் ஒரு அரசு ஊழியர். ஒரு அரசியல் கட்சியின் தலைவரைப் புகழ்வது சரியல்ல என்றும் தேர்தல் நடுநிலையாக நடக்காது என்றும் கூறி திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஆர்.நட்ராஜை பணி மாற்றி உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். திமுக கிளப்பிய சந்தேகம் பிறகு உண்மையானது.

பனி ஓய்வுக்குப் பின் நட்ராஜ் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். அது பலரையும் உற்றுநோக்கச் செய்தது. சென்னையில் பெருவெள்ளம் சம்பந்தமாக ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதில் நட்ராஜ் ஆளும் கட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறியதாகப் புகைப்படம் இடம்பெற்றது. உடனே ஜெயலலிதா கட்சியை விட்டும் அவரை நீக்கினார். ஆனால், புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது,ம் பேட்டி அளித்த நடராஜ் வேறு நபர் என்பதையும் விளக்கினார் ஆர்.நட்ராஜ். உடனடியாக கட்சிக்குள் இணைக்கப்பட்டார் அவர். தவறான செய்திக்குத் தனியார் தொலைக்காட்சி மன்னிப்பும் கோரியது.

ஆத்தாடி இம்புட்டு கோடியா? 'பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்?
ஆத்தாடி இம்புட்டு கோடியா? 'பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்?

பின்னால் 2014 அதிமுகவில் சேர்ந்த நட்ராஜ் 2016இல் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக நின்று 68,179 வாக்குகளில் வென்றார். இவரைப் போலவே பல அதிகாரிகள் பணி ஓய்வுக்குப் பின் அரசியல் கட்சிக்குள் பிரவேசித்துள்ளனர்.

பாஜக அண்ணாமலை தன் காவல்துறை பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவர். அதேபோல ஏ.ஜி.மெளரியா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். ஜெயலலிதா ஆசிட் வீச்சுக்குப் பின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஜனதா கட்சியில் இணைந்து தமிழ்நாடு மாநிலத் தலைவரானார்.

காவல் கண்காணிப்பாளராக இருந்த சங்கர் மற்றும் வேலன் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார் என்ற ஒரே தகுதியால் ஆர்.நட்ராஜ் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இந்த மாதிரியான அதிகாரிகளின் மறைமுக தொடர்பை உற்று நோக்கித்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் காலங்களில் அதிரடியாக அவர்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டிய தேவை உண்டாகிறது.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+