கை ரிக்ஷா ஒழிப்பு டூ மெட்ரோ ரயில் உருவாக்கம் வரை.. தமிழக வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி!
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், அவர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு தமிழக வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
கலைஞர் என்று திமுக தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் கருணாநிதி, கடந்த 1969 தொடங்கி 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வந்திருக்கிறார். இந்த காலத்தில் அவர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழ்நாட்டை, பொருளாதார ரீதியிலும், சிந்தனை ரீதியிலும் பல அடிகளை முன்னோக்கி நகர்த்தியது.

முதல் ஆட்சி
கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற காலம், உலகம் மிக முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டதது. சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கு இடையேயான போட்டி, உலக நாடுகளை மூன்று பிரிவாக பிரித்தது. ஒன்று அமெரிக்க ஆதரவு நாடுகள், இரண்டாவது சோவியத் ஆதரவு நாடுகள், மூன்றாவது எந்த பக்கமும் இல்லாத அணி சேரா நாடுகள்.
இந்த மூன்றாவது கட்டத்தில்தான் இந்தியா இருந்தது. எனவே இந்தியாவிலிருந்த ஆட்சியாளர்களும், கலவையான பொருளாதாரத்தையே பின்பற்றினர். தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது. கலைஞர் முதன்முதலில் முதலமைச்சராக பதவியேற்றபோது சமூக சீர்திருத்த திட்டங்களில் கவனம் செலுத்தினார். குறிப்பாக
சிறப்பு திட்டங்கள்
பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம்,
கை ரிக்ஷா ஒழிப்பு
குடிசை மாற்று வாரியம்
விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம்
நில உச்சவரம்பு குறைப்பு
ஆகியோர் கருணாநிதியின் முதல் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டங்களாகும். இதில் கை ரிக்ஷா ஒழிப்பு திட்டம் இன்றுவரை பேசுபொருளாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்கத்தில் கூட அப்போது கை ரிக்ஷா ஒழிக்கப்படவில்லை. "தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலத்தில் செய்யாததை எங்க தலைவர் தமிழ்நாட்டில் செஞ்சார பார்த்தியா! நாங்கதான் உண்மையான கம்யூனிஸ்ட்" என்று திமுகவின் இந்த திட்டத்தின் வெற்றியை கொண்டாடினர்.
5 முறை முதல்வர்
அதேபோல குடிசை மாற்று வாரியம், கருணாநிதியின் ஆட்சிக்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்தாலும், கருணாநிதி காலத்தில் பரவலாக சாமானிய மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வீடு போய் சேர்ந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை எனில், 'பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம்' உருவாக்கப்பட்டதை சொல்லலாம்.
இதன் பின்னர் 1971-1976, 1989-1991, 1996-2001 மற்றும் 2006-2011 என தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். இந்த காலங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டம், விவசாயக் கடன்கள் ரத்து, இட ஒதுக்கீட்டை 25%இல் இருந்து 50% ஆக உயர்த்தியது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு முறை,
சாதனைகள்
அரசு ஊழியர்களுக்கு 33% இட ஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கம், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், தனியார் பேருந்துகளை அரசுப் பேருந்துகளாக மாற்றியது, தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என நீண்டகாலம் போராடி, வெற்றி கண்டது, தமிழ் அறிஞர்களின் அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவு நூலகம் போன்றவற்றை உருவாக்கியது, மெட்ரோ ரயில் திட்டம், அதிவேக நெடுஞ்சாலைகள், கூடுதல் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களை அமைத்தது போன்றவை கருணாநிதியின் சாதனைகளாக இன்று வரை இருக்கிறது.
சென்னை மெட்ரோ
இதில் மெட்ரோ ரயில் திட்டம் இவரின் சாதனைகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது. கடந்த 2006-2011ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர முடிவு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்க டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத்திய மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியுடன் 'சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்' உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முதல் பகுதி ஆலந்தூர்-கோயம்பேடு வரை 2015ல் முடிவுற்றது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் முதல் மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications