சச்சின் டூ சல்மான் கான் வரை! மோடிக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்! கலங்கும் மாலத்தீவு! தெறிக்கும் X
சென்னை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சல்மான் கான் முதல் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரை பல பிரபலங்கள் இன்று லட்சத்தீவுக்கு ஆதரவாக பதிவுகள் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மாலத்தீவு கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சென்றார். லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். மேலும் அதுதொடர்பான போட்டோக்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், ‛‛லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். இங்குள்ள மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.
Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
— Akshay Kumar (@akshaykumar) January 7, 2024
We are good to our neighbors but
why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN
லட்சத்தீவின் அழகு மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் பண்புகளை வெளியுலகிற்கு எடுத்துகூறி அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இந்த பதிவை அவர் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து இந்தியர்கள் இந்த பதிவை அதிகம் இணையத்தில் ஷேர் செய்தனர். மேலும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் மாலத்தீவுடன் லட்சத்தீவை ஒப்பிட்டு இந்தியர்கள் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
வெடித்த மோதல்: இது மாலத்தீவில் உள்ள அரசியல் வாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மாலத்தீவின் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் பதிவிட்டு வன்மத்தை கக்கினார். இதையடுத்து Boycott Maldives எனும் ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியுனா,‛‛பீச் சுற்றுலாவில் மாலத்தீவுடன் இந்தியாவால் போட்டியிட முடியவில்லை. இதனால் இப்படி இந்தியர்கள் செய்கின்றனர்'' எனவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியை தரக்குறைவாகவும் விமர்சித்தும் கருத்து பதிவிட்டிருந்தார். இது மோதலாக உருவாகி உள்ளது.
It is so cool to see our Hon PM Narendrabhai Modi at the beautiful clean n stunning beaches of Lakshadweep, and the best part is that yeh hamare India mein hain.
— Salman Khan (@BeingSalmanKhan) January 7, 2024
பிரபலங்கள் ஆதரவு: இதனால் இந்தியர்கள் இன்னும் கோபம் அடைந்தனர். இதையடுத்து பல பிரபலங்கள் இதுதொடர்பான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், இந்திய தீவுகளின் பெருமைகளை கூறும் வகையிலும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை ஆதரிக்கும் வகையில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் தங்களின் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இவர் இந்தியாவின் லட்சத்தீவை சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தும், மாலத்தீவு தலைவர் இந்தியா குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு பதிலடி தரும் வகையிலும் இதனை செய்துள்ளனர்.
அக்ஷய் குமார்: இதுதொடர்பாக நடிகர் அக்ஷய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறினர். மாலத்தீவுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து செல்லும் நிலையில் இப்படி செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நமது அண்டை நாடுகளுக்கு செல்வது நல்லது தான். ஆனால் இனி ஏன் அப்படி செய்ய வேண்டும்? இதுபோன்ற வெறுப்பை பொறுத்துக்கொள்ள வேண்டுமா? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதோடு மாலத்தீவை பாராட்டி இருக்கிறேன். ஆனால் இனி நாம் நமது நாட்டின் சொந்த சுற்றுலாத்தலங்களை ஆதரிப்போம்'' என கூறியுள்ளார்.
250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024
The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.
India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz
சல்மான் கான்: அதேபோல் நடிகர் சல்மான் கான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எங்களின் பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார். நடிகை ஷ்ரத்த கபூர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த படங்கள் மற்றும் மீம்கள் அனைத்தும் பார்ப்பதன் மூலம் நான் மிஸ்ஸிங் அவுட் செய்ததாக நினைக்கிறேன். லட்சத்தீவு அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்: ஜான் ஆப்ரகாம், ‛‛லட்சத்தீவு என்பது அனைவரும் செல்ல வேண்டிய இடம். இந்தியர்களின் நல்ல விருந்தோம் உள்ள இடமாக இது இருக்கிறது'' என தெரிவித்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் லட்சத்தீவில் கிரிக்கெட் விளையாடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛சிந்துதுர்க்கில் எனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டம். இந்த கடற்கரை நகரம் நாங்கள் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. நல்ல விருந்தோம்பலுடன் கூடிய நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களுக்கு வழங்கியது. இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாக உள்ளது'' என தெரிவித்துள்ளார். இதனால் வலைதளங்களில் மாலத்தீவு, லட்சத்தீவு தொடர்பான விவாதம் அனல் பறக்க நடந்து வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications