தமிழகத்தில் வலுத்து வரும் போராட்டம்.. இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுத்து வருவதால் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் ஒட்டுமொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களிலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர், தஞ்சை உள்ளிட்ட கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தல், புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ஆம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
இந்த விடுமுறை அறிவிப்பை தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தற்போது அவர்களுக்கு இன்று முதல் விடுமுறையில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications