Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம மைண்ட் வேற அங்க போகுதே.. ”பங்காளி” ஆன “துரோகி” “வஞ்சகர்” “பாஜக அடிமை”.. டோனை மாற்றிய டிடிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக துரோகம் செய்துவிட்டது.. முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.. என கடந்த காலங்களில் மேடைக்கு மேடை முழங்கி வந்த டிடிவி தினகரன் இதுவரை எங்களுக்குள் நடந்தது பங்காளி சண்டை என கூறி அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து இருக்கிறார்.

இதுவரை எந்த அரசியல் தலைவரையும் விமர்சிக்காத வகையில் 'துரோகி' 'வஞ்சகர்' 'பாஜக அடிமை' என்ற வார்த்தைகளை பயன்படுத்திய டிடிவி தினகரன் இன்று நண்பர் எனக்கூறி அரசியல் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதே நேரத்தில் கடந்த காலங்களில் இவர்களது மோதல்களை சமூக வலைதளங்களில் விவாதம் ஆக்கி வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.

TTV Dhinakaran Edappadi Palaniswami nda

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து, எடப்பாடி பழனிச்சாமி மீது அவர் நடத்திய விமர்சன அரசியல், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தனி அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. "அதிமுகவை பாஜகவின் கிளை கட்சியாக மாற்றிவிட்டார்", "சசிகலா குடும்பத்தை ஒழித்துவிட்டதாக சொல்லி கட்சியை அடகு வைத்தார்", "அண்ணா-எம்ஜிஆர் கட்சியை டெல்லிக்கு தாரைவார்த்தார்" போன்ற வார்த்தைகள், தினகரனின் மேடை பேச்சுகளில் தொடர்ந்து ஒலித்தவை.

அதிமுக கூட்டணி

எடப்பாடி பழனிச்சாமியை "பாஜகவின் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் முதல்வர்", "அதிமுக தொண்டர்களை ஏமாற்றிய தலைவர்", "ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் கொள்கையை விற்றவர்" என தினகரன் விமர்சித்த காலங்கள் பல. 2017-2018 காலகட்டங்களில் அவர் மேடைகளில் பேசும்போது, எடப்பாடி பெயரைச் சொல்லாமல் கூட "அதிமுகவை சுயமரியாதை இல்லாத கட்சியாக மாற்றியவர்கள்" என கடுமையான வார்த்தைகளில் தாக்கினார்.

டிடிவி தினகரன்

2019, 2021 தேர்தல்களில் டிடிவி தினகரன் பயன்படுத்திய அரசியல் மொழி இன்னும் தீவிரமானது. "பழனிசாமியுடன் போவதற்கு தூக்கு மாட்டி சாகலம்", "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக வீழ்ந்தது", "எடப்பாடி பழனிச்சாமி எங்கள் முதுகில் குத்தினார்", "தொண்டர்களின் வாக்குகளை டெல்லிக்கு அடகு வைத்தார்" என்பவை அவரது முக்கிய அரசியல் குற்றச்சாட்டுகள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை தொடர்ந்து முன்வைத்து, "இந்த கட்சி இப்படியொரு தலைமையை ஒருபோதும் ஏற்காது" எனவும் அவர் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

இத்தகைய பின்னணியில், இன்று டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருப்பதை எடப்பாடி பழனிச்சாமி "வரவேற்கிறேன்" என்று கூறியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நேற்றைய "துரோகி", "வஞ்சகர்", "பாஜக அடிமை" என்ற வார்த்தைகள் இன்று எந்த அரசியல் கணக்கில் மறக்கப்பட்டன என்பது தான் பொதுவாக எழும் கேள்வி.

பாஜக கூட்டணி

அதேபோல், தினகரன் தொடர்ந்து விமர்சித்த பாஜக கூட்டணியிலேயே இன்று அவர் இடம் பிடித்திருப்பதும், அவரது கடந்தகால அரசியல் பேச்சுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக அழியும்" என்று கூறிய தினகரன், அதே பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது, அரசியலில் கொள்கையா முக்கியமா? கூட்டணி கணக்கு முக்கியமா? என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

2026 தேர்தல்

ஒருபுறம், தினகரனை கட்சியிலிருந்து நீக்கி, "அதிமுகவை மீட்டோம்" என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, மறுபுறம் அதே தினகரன் என்டிஏவில் இணைந்ததை 'நண்பர் 'எனக் கூறி வரவேற்கும் நிலை, 2026 தேர்தல் குறித்த பயத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.

டிடிவி தினகரன் யூ டர்ன்

இந்த அரசியல் யூ-டர்ன்கள், தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் "யார் யாரை ஏமாற்றினார்கள்?" என்ற கேள்வியை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளன. தமிழ்நாட்டு அரசியலில், இன்று எதிரி நாளை நண்பன் ஆகலாம் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக, டிடிவி தினகரன்-எடப்பாடி பழனிச்சாமி அரசியல் உறவு, வரலாற்றில் பதிவாகியுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+