குழப்பும் ஆன்லைன் புக்கிங்! கும்பகோணம் செல்ல பஸ்கள் எங்கு கிடைக்கும்? கோயம்பேடா, கிளாம்பாக்கமா?
சென்னை: சென்னையிலிருந்து கோயம்பேட்டிற்கு செல்ல கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டுமா அல்லது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும் என்ற குழப்பத்தை ஆன்லைன் புக்கிங் ஏற்படுத்துகிறது.
சென்னையில் 1980, 90களில் இருந்த பூக்கடை பேருந்து நிலையத்தில்தான் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் அங்கு பேருந்து நிலையம் இல்லாத நிலையிலும் கோயம்பேட்டில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

அது 2002ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த கோயம்பேட்டில் இருந்துதான் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், வடமாவட்டங்கள், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அப்படியிருக்கும் போது அங்கும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சென்னையே ஸ்தம்பிக்கிறது என்பதால் பண்டிகை காலங்களில் மட்டும் சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து அந்தந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து தென்மாவட்ட மக்களின் பயணம் எளிதாக அமைய கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்த பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் கோட்டம்
இந்த பொங்கலுக்கு விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த மேல்மருவத்தூர், திண்டிவனம்,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர், வந்தவாசி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்லும். மேலும், விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, விருதாச்சலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
சேலம் கோட்டம்
சேலம் கோட்டம் பேருந்துகளை பொறுத்தவரையில் அதிக அளவிலான பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆத்தூர்,பள்ளப்பட்டி, ஓமலூர், ராசிபுரம், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்
பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
வந்து செல்கின்றன.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர்,ஓமலூர்,நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள்
செல்கின்றன.
கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர் கோட்டம் பொருத்தவரையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து
பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே பேருந்துகள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் கோட்டத்தில் S.E.T.C குன்னூர் ஊட்டி பேருந்துகளும், கோயம்புத்தூர் ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளும் செல்லும்.
கும்பகோணம் கோட்டம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய மார்த்தாண்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம், ஏர்வாடி, சாயல்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்லும். திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.

திருநெல்வேலி கோட்டம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி கோட்டத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, திருச்செந்தூர்,கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளுக்கு S.E.T.C பேருந்துகள் செல்கின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கிளாம்பக்கத்தில் இருந்தும் பேருந்துகள் செல்லும்.
இந்த பொங்கல் முடியும் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, ஆற்காடு, காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பதி, சித்தூர், திருமலை திருப்பதி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோயம்பேட்டில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி அதாவது பொங்கலுக்கு முன்பே சென்னையிலிருந்து கும்பகோணம் செல்ல ஆன்லைனில் அரசு பேருந்தில் டிக்கெட் புக் செய்ய முயன்ற போது பயணிகளுக்கு குழப்பம் காத்திருந்தது. எந்த இடம் என்ற இடத்தில் கிளிக் செய்த போது சென்னை புறநகர் பேருந்து நிலையம் (கோயம்பேடு) என்ற இடமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ற இடமும் இருந்தது.
சரி ஏதோ தெரியாமல் இருக்கிறது என பயணிகள் நினைத்து எதுக்கும் செக் செய்வோம் என சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து கும்பகோணத்திற்கு என்னென்ன பேருந்துகள் இருக்கின்றன என்பதை பார்த்த போதுதான் சில பேருந்துகள் லிஸ்ட் வந்தன.
இதையடுத்து சரி கோயம்பேட்டிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறதா என போட்டு பார்த்தாலும் அங்கிருந்தும் சில பேருந்துகளின் லிஸ்ட் வந்தது. இதனால் பயணிகள் கும்பகோணம் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமா இல்லை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமா? என்பது தெரியாமல் புக்கிங் செய்வதில் குழப்பம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications