சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் பரபரப்பு! பெங்களூரில் விமானம் தரையிறக்கம்
சென்னை: கவுகாத்தியிலிருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில், நடுவழியில் எரிபொருள் காலியாகியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக அவசரமாக பெங்களூரில் தரையிறங்கியுள்ளது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதால், பயணிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு காரணங்களுக்கான விமானங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம். விமானம் வலுவான எதிர்க் காற்றுடன் பறக்கும்போது, அது திட்டமிட்டதை விட அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும். இது விமானத்தின் வேகத்தைக் குறைத்து, இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் கூட எரிபொருள் குறையலாம். மோசமான வானிலை காரணமாக விமானம் வேறு நிலையத்தில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். இதுகூட விமான எரிபொருள் இருப்பை காலியாக்கும்.
விமான நிலையங்களில் அதிக விமானங்கள் பறப்பதும், லேண்ட் ஆகுவதும் நடந்துக்கொண்டிருக்கும்போது, மற்ற விமானங்கள் தரையிறங்க காத்திருக்க வேண்டி வரும். எனவே, விமானத்தின் எரிபொருள் அதிகம் செலவாகும். ராணுவப் பயிற்சி அல்லது பிற போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தின் பாதை மாற்றப்பட்டிருந்தாலும் எரிபொருள் காலியாகலாம்.
இதெல்லாம் தவிர, ரொம்பவும் அரிதாக, விமான எரிபொருள் டேங்கில் ஓட்டை ஏதும் ஏற்பட்டிருக்கலாம். இதனால்கூட விமானம் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கலாம்.
தற்போது தரையிறங்கியுள்ள இண்டிகோ விமானம் என்ன காரணத்திற்காக தரையிறங்கியிருக்கிறது என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு காரணம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications