பெட்ரோல் டீசல் விலை: வெற்றிகரமான 125வது நாளாக மாற்றமில்லை - லிட் ரூ 15 வரை உயர வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலையில் 125வது நாளாக மாற்றமின்றி இன்று விற்பனையாகிறது. 5 மாநில தேர்தல் முடிந்துள்ளதால் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 125வது நாளாக எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயரவில்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் விலை ரூ.15 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரவில்லை. 100வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

 சதமடித்த பெட்ரோல், டீசல் விலை

சதமடித்த பெட்ரோல், டீசல் விலை

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்தது எப்படி

விலை குறைந்தது எப்படி

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

 125வது நாளாக விலை உயரவில்லை

125வது நாளாக விலை உயரவில்லை

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 125வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலராக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

விலை உயர வாய்ப்பு

விலை உயர வாய்ப்பு

தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.01 என்றளவில் குறைந்தது.

 படிப்படியாக உயர வாய்ப்பு

படிப்படியாக உயர வாய்ப்பு

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85% வரை இறக்குமதி மூலமே சமாளிக்கிறது. இதனால், ஆசிய நாடுகளிலேயே இந்தியா கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில் எண்ணெய் விலை தினசரியும் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், நவம்பர் 4, 2021 முதல் இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றமே இல்லை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 அதிகரிக்கலாம் என்றாலும். ஒரே நாளில் செய்யாமல் படிப்படியாக தினமும் 1 ரூபாய் என்றளவில் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+