ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது.. "10 சதவீதம்.." குளு குளு தகவல்
சென்னை: சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த 10-14 நாட்களில் கிடுகிடுவென குறைந்துள்ளது. சுமார் 10 சதவீதம் அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
விலை குறைப்பு பயன்களை மக்களுக்கு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) வழங்க முடிவு செய்தால் இந்தியாவில் எரிபொருள் விலை விரைவில் குறையக்கூடும்.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய்க்கு. 63.98 டாலராக விற்பனையாகிறது, இது சமீபத்தில் அதிகபட்சமாக $70 க்கு மேல் விற்பனையாகிவந்தது.

ரூ.100 விலை
ஒரு கட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற அளவுக்கு மேலே போய்விட்டது. டீசல் விலை அதிகரித்ததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உலக அளவில் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்து கொண்டதுதான்.

எண்ணை உற்பத்தி
கொரோனா பரவல் கால கட்டத்தில், உலக அளவில் வாகன போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன. எனவே அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன. இதனால் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்றின.

அமெரிக்காவில் ஊக்கம்
அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்புக்கு பேக்கேஜ் வழங்கப்பட்டும் பணிகள் தொடங்கிவிட்டது. எனவே, மறுபடி எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதன் காரணமாகத்தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சர்வதேச சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த விலை குறைப்பு லாபத்தை மக்களுக்கு கடத்துவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மனது வைத்தால் நடக்கும்.

விலைவாசி குறையுமா
தற்போது தேர்தல் காலம் என்பதால் மத்திய அரசும், ஒருவேளை அழுத்தம் கொடுத்தால், விலைவாசி குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுனர்கள். மனது வைப்பார்களா என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications