சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.. இன்றைக்கு மாற்றம் எதுவும் இருக்கா? - விலை எப்போது குறையும்?

பெட்ரோல், டீசல் தொடர்ந்து 25ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 25வது நாளாக மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102ரூபாய் 63பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக விற்பனையாகி வருகிறது.

Recommended Video

    Tamil News June 15 | காலை முக்கியச்செய்திகள் | #NewsWrap

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    Fuel prices June 15, 2022: Petrol and diesel prices remained unchanged for the 25th day in India

    கடந்த ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

    பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது. ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்தது.

    கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின்றி விற்பனையானது. 40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.

    பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 25 வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102ரூபாய் 63பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக விற்பனையாகி வருகிறது.பெட்ரோல் டீசல் விலை உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    English summary
    Fuel price Today on June 15th,2022: ( பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் ஜூன் 15, 2022) Petrol and diesel prices have not changed for 25th days. In Chennai, petrol is priced at 102 rupees 63 paise a liter and diesel at 94 rupees 24 paise a liter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X