சென்னை மாநகருக்கு பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு வெளியிட்ட சூப்பர் 10 அறிவிப்புகள் முழு விவரம்
சென்னை: 2025-26 பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை மாநகருக்காக வெளியிட்ட அறிவிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். வடசென்னை வளர்ச்சி திட்டம், சென்னை பெருநகர மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை, சென்னை நகர போக்குவரத்து மேம்பாடு, சென்னைக்கு புதிய ஏரி, சென்னை நகரில் தொழிலாளர் நலத்திட்டங்கள், சென்னை புறநகர் ரயில்வே மற்றும் மழைநீர் மேலாண்மை, குடிநீர் திட்டங்கள் என பல்வறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டம்
வட சென்னையில் பேருந்து வசதி, குடியிருப்புகள், குடிநீர் திட்டங்கள், கல்வி மற்றும் மருத்துவ அடிப்படை வசதிகள், ஏரிகள், கடற்கரை மேம்பாடு, மீன் சந்தை கட்டுமானம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை
கொடுங்கையூர் குப்பை தேங்கும் பகுதியில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம், மற்றும் மின்சக்தி உற்பத்தி நிலையம் 3,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். திடக்கழிவு மேலாண்மையை மேலும் துரிதப்படுத்த சென்னைக்கு அருகிலுள்ள நகராட்சிகளிலும் Waste-to-Energy (கழிவில் இருந்து மின் உற்பத்தி) திட்டங்கள் செயல்படுத்தப்படும். தாம்பரம் பகுதியில் 1,500 டன் கழிவை மறுசுழற்சி செய்து 15-18 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் அமைக்கப்படும்.
சென்னை மக்களுக்கான குடிநீர் திட்டங்கள்
சென்னையில் குடிநீர் மேலாண்மைக்கு மொத்தமாக ₹26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6,483 கி.மீ. சாலைகள் 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 570 கி.மீ. சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பைசாந்தி நகரில் பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ. நீளத்திற்கு 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படும்
சென்னை நகர போக்குவரத்து மேம்பாடு: கிண்டி முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ. நீளமான புதிய மேம்பாலம் ₹310 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை புறநகர் ரயில்வே மற்றும் மழைநீர் மேலாண்மை
வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில் சென்னையின் 7 பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் Sponge Park திட்டங்கள் ₹88 கோடி செலவில் செயல்படுத்தப்படும். சக்கரக்கோவில் முதல் சான்தோம் வரை புதிய புறநகர் ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும். 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நதிகளை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம் அமைக்கப்படும்.
சென்னை நகரில் தொழிலாளர் நலத்திட்டங்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து *பெண்கள் தொழிலாளர் ஓய்வுக்கூடங்கள் உருவாக்கப்படும். மெட்ரோ ரயில் பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் புதிய நகரம் உருவாக்கம்:
சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்படும். இந்த நகரம் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த நகரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதி மையங்கள், ஆராய்ச்சி மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை அமைக்கப்படும். இந்த நகரம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் வகையில் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்.
சென்னையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்:
சென்னையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்படும். சென்னையில் 100 கோடியில் அறிவியல் மையம் உருவாக்கப்படும். இந்த மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்கள் மட்டுமல்லாமல், விண்வெளி, கடல் ஆராய்ச்சி மற்றும் டிஜிட்டல் அனுபவ அரங்குகள் அமைக்கப்படும்.

சென்னையில் சுற்றுச்சூழல் மேம்பாடு:
சென்னையில் சுற்றுச்சூழல் மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஏரிகள் மற்றும் குளங்கள் புதுப்பிக்கப்பட்டு, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
சென்னையில் மகளிர் பாதுகாப்பு மற்றும் உரிமை:
சென்னையில் மகளிர் பாதுகாப்பு மற்றும் உரிமை திட்டங்கள் செயல்படுத்தப்படும். மகளிர் விடுதிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய விடுதிகள் அமைக்கப்படும்.
சென்னையில் ஆறாவது ஏரி:
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தினாலும் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவும் சென்னையில் ஆறாவது நீர் தேக்கம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். திருப்போரூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மிகப்பெரிய நீர்வழிப்பாதையில் இந்த புதிய நீர்தேக்கம் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications