தமிழகத்தில் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? கொரோனா குறையாததால் அரசு முடிவு.. வெளியான தகவல்
சென்னை: தமிழகத்தில் மே மாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்ததன் காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்து இருந்தது.
ஊரடங்கு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் சட்டசபை உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார். அப்போது முழு ஊரடங்கை, நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது போன்ற விஷயங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளார்.

பிற நகரங்களில் பாதிப்பு அதிகரிப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக மருத்துவ நிபுணர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த நிலையில்தான் மே மாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக நோய் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

படுக்கை வசதிகள்
மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் சென்னையை தொடர்ந்து கோவை, நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

மே 31ம் தேதிவரை
தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டிச் சென்றுவிட்டது. இப்படியான நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் நோய் பரவல் மிக மிக அதிகரிக்கும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், உற்பத்தி துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு லாக்டவுனில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கால் பலன்
ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் இதுபற்றி கூறுகையில், முழு ஊரடங்கு பலன் காரணமாகத்தான் கடந்த சில நாட்களாக நோய் தொற்று குறைய ஆரம்பித்திருக்கிறது. இது இன்னமும் குறைய வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தக் கூடிய காலகட்டத்தில், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications