அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி
சென்னை: முதல்வர் விஜய் மீதான பொறாமையால் ஆட்சி மீது விமர்சனம் வைக்கிறார்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தவெகவினர் தற்குறி அல்ல, அவர்கள் ஒரு அம்புக்குறி என்று கூறியுள்ள ராகவா லாரன்ஸ், விரைவில் தனது தாயார் முன்னிலையில் அரசியல் வருகை குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று ரசிகர்கள் கருத்து கூற வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த சூழலில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீட்டின் முன்பாக அவரது ரசிகர்கள் பலரும் கூடினர். இதன்பின் அவர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் ராகவா லாரன்ஸ் பேசுகையில், நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம்.. ஒரு முடிவை எடுத்துள்ளேன். என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து என் தாயை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன். ஒரு மாத கால தவெக ஆட்சி சிறப்பாக, சூப்பராக இருக்கிறது.
குறிப்பாக பள்ளிகள், கோயில்கள் முன் இருந்த டாஸ்மாக் கடைகளை அடைத்ததை வரவேற்கிறேன். கல்வி அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும். ஒரு வாடகை வீட்டிற்குள் சென்றாலே, அது செட்டாக சில காலம் பிடிக்கிறது. மாற்றம் வேண்டும் என்று நினைத்து கொண்டு வந்துவிட்டோம்.
அந்த மாற்றம் நடக்க நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைப்பட்ய்ஹற்கு பொறாமை தான் முக்கியமான காரணம். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டி தொடர்பாக அரசியல் வருகை அறிவிப்புக்கு பின் பேசலாம். யாருடன் இணைந்து செயல்படுவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்.
அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் இருக்கிறேன். அவர்களிடம் உதவி கோரி இருக்கிறேன். ரஜினியின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன். அவரின் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது. அவர் ஆல் தி பெஸ்ட் என்று கூறினார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அணாமலையும் வரலாம்.. புதியவர்கள் வருவது நல்லது..
தவெகவினர் தற்குறி அல்ல.. அவர்கள் ஒரு அம்புக்குறி.. அந்த அம்புக்குறியால் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். விமர்சித்து கொண்டே இருப்பதை விட்டுவிடுங்கள்.. திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி.. வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது. அரசியலுக்கு வருவேனா என்பதை அறிவித்த பின்னர் தான், நடிப்பேனா என்பது குறித்து முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications