5ல் ஒருவர்.. வேகமாக பரவிய செய்திகளுக்கு ஸ்டாலின் வைத்த "புல் ஸ்டாப்".. அந்த நொடி.. உருகிய கனிமொழி!
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு வதந்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஒருவழியாக திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. அதேபோல் இன்று தலைவர், பொருளாளர். பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

கனிமொழி
இந்த அறிவிப்பிற்கு முன்பு வரை திமுகவிற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வதந்திகள், விவாதங்கள் இது தொடர்பாக வந்தன. கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது. சுப்புலட்சுமி ஜெகதீசன்தான் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். ஆனால் அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து வெளியேறிய காரணத்தால் இந்த பதவி கட்சியில் இருக்கும் வேறு ஒரு பெண் தலைவருக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

வதந்தி
கனிமொழி பெயர் இதில் அடிபட்டாலும்.. ஒரு சிலர் ஸ்டாலின் அந்த பதவியை கனிமொழிக்கு கொடுக்க மாட்டார் என்றும் வாதம் வைத்தனர். தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தாய் சேர்ந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இந்த லிஸ்டில் முன்னிலையில் இருந்தார். திமுகவின் மகளிரணி செயலாளராக கனிமொழி இருப்பதாக, தமிழரசிக்கு இந்த பதவி கிடைக்கும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன. தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை எப்படியாவது அள்ள வேண்டும் என்று பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் முயன்று வருகின்றன.

தமிழரசி
பிரதமர் மோடியே தன்னை நான் நரேந்திரர்.. நீங்கள் தேவேந்திரர் என்று அழைக்க இது முக்கியமான காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் தமிழரசியை துணை பொதுச்செயலாளர் ஆக்கினால் அது மிகப்பெரிய அளவில் கவனம் பெறும் என்று கூறப்பட்டது. கனிமொழிக்கு ப்ரமோஷன் கொடுக்காமல் தமிழரசியை ஸ்டாலின் முன்னிறுத்துவார் என்று பலர் பேசி வந்தனர். இந்த நிலையில்தான் இந்த வாதங்கள், விவாதங்கள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விவாதங்கள்
கட்சிக்குள் நிலவிய விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, கனிமொழிதான் துணை பொதுச்செயலாளர் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதெல்லாம் போக திமுகவில் 5 பேருக்கு இருக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியை 7 பேருக்கு அறிவிக்க ஸ்டாலின் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த பதவிக்கான மவுசை குறைத்து, அதில் ஒருவரோடு ஒருவராக கனிமொழியை ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூட வதந்திகள் பரவி வந்தன.

முற்றுப்புள்ளி
அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஸ்டாலின் கனிமொழியை துணை பொதுச்செயலாளராக அறிவித்து உள்ளார். அதோடு துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இன்று அந்த அறிவிப்பு வெளியானது கனிமொழி நெகிழ்ச்சியாக காணப்பட்டார். கர்ஜனை மொழி.. கனிமொழி என்று ஸ்டாலின் பாராட்டி அழைத்ததும் கனிமொழி உருக்கமாக வணங்கியபடி மேடைக்கு வந்து மரியாதை செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications