7 மாவட்டங்களை முடக்கிய கஜா புயல்.. பேருந்துகள், ரயில்கள், கடைகள் இயங்கவில்லை
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே ரயில்கள் முடக்கம்
இந்த புயல் காரணமாக ஏற்கனவே ரயில்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை , விழுப்புரம் - மயிலாடுதுறை, காரைக்கால் - சென்னை, சென்னை - மன்னார்குடி ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த புயல் காரணமாக காரைக்கால், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

கடைகள் அலுவலகங்கள்
அதேபோல் கடைகள் அலுவலகங்கள் எதுவும் நாளை காலை வரை இயங்காது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் இன்று மாலையே மூடப்பட வேண்டும், பணியில் இருப்பவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நாளைக்கு சேர்த்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பேருந்துகள்
தற்போது கஜா காரணமாக 7 மாவட்டங்களில் தனியார், அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

மொத்தமாக முடக்கியது
புயல் வீசும் நேரத்தில் டூவீலரில் போவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு புயலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களை புயல் முடக்கி போட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications