கஜா வர்றாண்டா.. கஜா வர்றாண்டா.. சென்னையை நெருங்கும் கஜா புயல்.. இப்போது எங்குள்ளது!
கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துதான் இந்த பெயரை வைத்தது. இந்த புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
[கஜா வாரண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்! ]

இன்னும் பெரிதாக்கவில்லை
இந்த புயல் இன்னும் பெரிய அளவில் தீவிரம் அடையவில்லை. இப்போது சிறிய புயலாகத்தான் இருக்கிறது. சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

எங்கு வரும்
இந்த புயல் சென்னையை நோக்கி வந்து பின் சென்னையை கடக்கும். சரியாக சென்னை வழியாகத்தான் இந்த புயல் கடந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் வழியாக ஆந்திரா வரை இந்த புயல் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேகம் அதிகரிக்கும்
இந்த புயலில் வேகம் சென்னையை நெருங்க நெருங்க அதிகரிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இது 12 கிலோ மேட்டர் வேகத்தில் தான் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையையே நெருங்கும் போது 40-60 கிலோ மீட்டர் வேகத்தை அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

என்ன கூறினார்கள்
இதனால் சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கனமழை பெய்தாலும் இந்த புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று இப்போது கூற இயலாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications