மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே.. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை.. முதல்வர் விளக்கம்
கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்
சென்னை: கொரோனா பரவல் காரணமாக மத ஊர்வலங்களை நடத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அதனை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து 10 நாட்கள் பஜனைகள் களைகட்டும். பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா மதுரையில் ரத்து செய்யப்பட்டது. மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதே போல ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது. இதனை ஏற்க இந்து முன்னணியினர் மறுத்து வருகின்றனர். தடையை மீறி கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சிலை வைத்து வழிபடுவோம் என்று கூறியுள்ளனர்.
இந்து முன்னணியின் நிலைப்பாட்டை நாங்களும் பின்பற்றுவோம், ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுப்போம் என்று பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வேலூரில் கொரோனா ஆய்வுப்பணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, மத்திய அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றியே மத ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறினார்.
கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications