கரையாத விநாயகர் சிலைகள்.. குப்பை மேடு போல மாறிய சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை.. ராதாகிருஷ்ணன் ஆய்வு
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கி கிடக்கும் நிலையில், அதை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரம்மாண்ட சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது.

அதன்படி, விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க நேற்றும், நேற்று முன்தினமும் காவல்துறை அனுமதி வழங்கியது. அந்த வகையில், விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிரேன் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தியாகராய நகர், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பல சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கியதை காண முடிந்தது. கடற்கரைகளில் கரையாமல் சிலைகள் கரை ஒதுங்கி கிடந்தது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை மநாகாராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மெற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளே கரைக்கப்பட்டது. சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது. பெரிய சிலைகள் உள்ளே போகாமல் தடுமாறும் நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் பணியாளர்கள்... இன்னொரு பக்கம் பெரிய சிலைகளை மீண்டும் கடலில் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
தாழ்வான அலைகளாக வருகிறது. ஹை டைடு வரும் போது சின்ன சிலைகள் தானாக போய்விடும். இரவு பகல் பாராமல் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். மீனவர் தன்னார்வலர்களும் கூடவே இருக்கிறார்கள். காவல்துறையும் தேவைப்பட்டால் கிரேனுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். 40 மெட்ரிக் டன் பூக்கள் போன்ற குப்பைகளை அகற்றியிருக்கிறோம்.
அதை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடல் எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்ளாமல் சில சிலைகள் மட்டுமே வெளியே வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சில சிலைகள் வரும். குறிப்பாக பெரிய சிலைகள் 20 உள்ளன. பூக்கள் போன்றவற்றை அகற்றுவதற்கும் இரவு பகல் பாராமல் பணியாளர்கள் உழைக்கிறார்கள். பெரும்பாலான சிலைகள் தானாக கரைந்துள்ளது" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications