விநாயகர் சதுர்த்தி! ராணிப்பேட்டையில் 14 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதி!
சென்னை: ராணிப்பேட்டையில் 14 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் வைக்க அனுமதி கோரி, இந்து மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் எஸ் கே மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், முப்படுவெட்டி ஆர்காடு, கஸ்ப்பா, சன்னியாசி மண்டபம், கலவை ரோடு, நேரு வீதி திருப்பாற்கடல், விவேகானந்தர் அந்திப்பட்டு, அண்ணாநகர் அம்மூர், மேட்டூத்தெரு, உள்ளிட்ட 16 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் செப்டம்பர் 07 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை ராணிப்பேட்டையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டு, செப்டம்பர் 11 ம் தேதி அம்மூர் ஏரியில் விநாயகர்களை கரைக்க , உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது இந்து மக்கள் கட்சி தரப்பில், வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி, விநாயகர் சிலை வைக்க கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதியே மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
அரசு தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, ராணிப்பேட்டையில் 16 இடங்களில் விநாயகர் சிலை வைக்க மனுதாரர் அனுமதி கோரியிருந்தார் அதில் 14 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ராணிப்பேட்டையில் 3 நாட்கள் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக, மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications