அந்த "நடிகர்" யார்.. 13 வயது பிஞ்சுவை மாறி மாறி சீரழித்த 4 காம கொடூரர்.. அதிர்ச்சியில் உறைந்த சென்னை
சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் கைதானார்கள்
சென்னை: பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், பள்ளி மாணவிகளே உடந்தையாக இருந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது,
சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்து வருகின்றன.. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இந்த குற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.
இந்த சட்டத்தின்கீழ் கைதானால், கடும் தண்டனை கிடைக்கும் என்ற போதிலும், பாலியல் சம்பவங்கள் இன்னும் குறையாமலேயே தொடர்கிறது. இதற்காக தமிழக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

விழிப்புணர்வு
எவ்வளவுதான் விழிப்புணர்வு தந்தாலும், செல்போன்கள் இன்று படிக்கும் பிள்ளைகளிடம் சகஜமாகிவிட்டதால், இதனால் ஏற்படும் சில ஆபத்தில் அவர்களாகவே சிக்கி கொள்ளும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னையில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. வளசரவாக்கத்தை சேர்ந்த மாணவி அவர்.. 13 வயதாகிறது.. ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்... அதே பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும் மாணவர் வசந்த்கிரிஷ்.. இவர் கன்னியாகுமரியைசேர்ந்தவர்..

மருத்துவ கல்லூரி
இங்குள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.. 8ம் வகுப்பு மாணவியை இவர் காதலிப்பதாக கூறி, நெருக்கமாக பழகி உள்ளார்.. உல்லாசமாகவும் இருந்துள்ளார்.. அத்துடன் தன்னுடைய 3 நண்பர்களுக்கும் அந்த மாணவியை விருந்தாக்கி உள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்ததையடுத்து, வடபழனி மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்... இதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின..

மருத்துவ மாணவர்
மருத்துவ மாணவரான வசந்த் கிரிஷ் மாணவியை, தன்னுடைய 3 நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார்.. இதில், ஒருவர் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா ஆவார்.. மற்றொருவர் கல்லூரி மாணவர் விஷால், இன்னொருவர் சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் ஆகியோர் ஆவர்.. இவர்கள் 3 பேரையுமே மாணவிக்கு காதலன்தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.. அவர்களுடனும் உல்லாசமாக இருக்கவும் மாணவியை கட்டாயப்படுத்தி உள்ளார்.

சிறுமி
இதில் 4 பேரும் சேர்ந்து கூட்டாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும், அப்படிப்பட்ட நேரங்களில் மாணவியை முழு போதைக்கு அடிமையாக்கிவிடுவதும் தெரியவந்துள்ளது.. நாளுக்கு நாள் மாணவியின்
உடல்நிலை பாதிக்கப்படவும், சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்துள்ளனர்.. அப்போதுதான் இந்த பயங்கரம் தெரியவந்துள்ளது.. அவர்கள் போலீசுக்கு போனதையடுத்து, வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரும் கைதாகி உள்ளனர்.. 4 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

கல்லூரி மாணவி
இந்த அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பு இதே வழக்கில் இன்னொரு அதிர்ச்சி வெளியாகி உள்ளது.. மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 கல்லூரி மாணவிகளுக்கும், ஒரு பள்ளி மாணவிக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது... இதில் கைதான விஷாலின் காதலிதான், கல்லூரி மாணவிகளுள் ஒருவராம்.. மாணவி பலாத்காரத்திலும் விஷாலின் காதலிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

பலாத்காரம்
பலாத்காரத்துக்கு உதவிய அந்த மாணவிகள் ஒருவர் திருவொற்றியூரை சேர்ந்தவராம்.. இந்த மாணவி மூலம்தான் பாதிக்கப்பட்ட மாணவி வசந்த்கிரிசுக்கு அறிமுகமாகி உள்ளார்.. எல்லாரும் பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் நட்புடன் இருந்து வந்துள்ளனர்.. இன்ஸ்டாகிராம் வந்தபிறகுதான், மாணவிக்கு வலை வீசி உள்ளார் வசந்த் கிரிஷ்.. இவர் பணக்கார வீட்டு பையனாம்.. இவர் படிப்பதற்காகவே, தனியாக வீடு ஒன்றை எடுத்து தந்திருக்கிறார்கள் இவரது பெற்றோர்.. அந்த வீட்டுக்குதான் மாணவியை அழைத்து வந்து ஜாலியாக இருப்பாராம்..

உல்லாசம்
இதைதவிர, வார வாரம் மற்ற பெண் தோழிகளுடன் சேர்ந்து பப்புக்கு போவாராம்.. கடந்த ஒரு மாதமாகவே மாணவியை தினமும் கூட்டு பாலியலுக்கு உட்படுத்தி உள்ளனர்.. பப்புக்கு அந்த பள்ளி மாணவியை அழைத்து சென்றுவிடுவாராம்.. நள்ளிரவு 2, 3 மணிக்குதான் வீட்டுக்கு கூட்டிவருவாராம்.. போதையிலேயே விழுந்து கிடந்ததில், அந்த மாணவியால் நிறைய நாட்கள் ஸ்கூலுக்கு போக முடியாமலும் இருந்துள்ளது.. இப்படி, ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு நாளும் மாணவியை அழைத்து கொண்டு அவரவர் தங்கியுள்ள ரூம்களுக்கு அழைத்து சென்று போதை பொருளை தந்து ஜாலியாக இருந்துள்ளனர்.. அனைவரிடமும் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications