சி.டி. மணியை தொடர்ந்து சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... தப்பிக்க முயன்றதால் கை, காலில் முறிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சென்னை ரவுடி சி.டி. மணியை தொடர்ந்து வடசென்னை தாதா காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்தனர். போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றதால் காக்காதோப்பு பாலாஜிக்கி கை, காலில் முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏழுகிணறுதான் காக்கா தோப்பு பாலாஜியின் ஏரியா. வடசென்னை ரவுடி நாகேந்திரனின் வலது கரமாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரின் சில அசைன்மெண்டுகளை கூட செய்து முடிக்கும் அளவுக்கு செல்வாக்கு கிடைத்தது.

காக்கா தோப்பு பாலாஜி மீது 7 கொலை வழக்குகள், ஆட்கடத்தல்கள், கட்டப் பஞ்சாயத்துகள் என ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அண்மையில் ரவுடி சி.டி. மணியை தூக்கியது போலீஸ்.

Gangster Kakkathoppu Balaji arrested by Police near villupuram

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அருகே காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காக்கா தோப்பு பாலாஜியை போலீஸ் சுற்றி வளைத்தனர். அப்போது பாலாஜி தப்பி ஓட முயன்றதில் கை காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் தப்பி ஓட முடியாத பாலாஜியை மடக்கினர் போலீஸ். சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எழும்பு முறிவுகளுக்கு கட்டுப் போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி காக்கா தோப்பு பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+