பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா.. அரசின் கேஸ் சிலிண்டர் சர்ப்ரைஸ் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள்.
காப்பீடுகள்: அதேபோல, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது... அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஸ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் போன்றவை நடந்துவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன. மொத்தத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சலுகைகள்: இப்படிப்பட்ட சூழலில், விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், பெரும்பாலான திட்டங்களை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. அந்தவகையில், விவசாயிகளுக்கான அறிவிப்புகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதேபோல, ரேஷன் திட்டத்தின்மூலமும் பொதுமக்களுக்கான அறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இதில், உத்தரபிரதேச மாநிலம் முதன்மையாக இருந்துவருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாம்.. உபி மாநில முதல்வர் யோகி, மாநிலத்தின் தகுதியுள்ள 1.75 கோடி குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்க உள்ளதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகை: அதன்படி, தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது, வருடத்துக்கு 2 முறை இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம்..
இந்த திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ஹோலியிலும் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக மாநில அரசு ரூ.2,312 கோடி செலவு செய்யவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான், விவசாயிகளுக்கு மின்கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதன்மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குழாய் கிணறுகளை பயன்படுத்தி, விவசாயிகள் ஒரு ரூபாய் கூட இனிமேல் கரண்ட் பில் கட்டவேண்டிய தேவையே இல்லையாம். 14,78,000 குழாய் கிணறுகளின் மின் கட்டணம் நூறு சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. .
மகிழ்ச்சி: இந்த திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட 1.5 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோலவே இந்த கியாஸ் சிலிண்டர் அறிவிப்பானதும், உத்தரபிரதேச மாநில மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. தேர்தலுக்குள் இதுபோல முக்கிய அறிவிப்புகள்இ மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நாடு முழுவதும் வெளியாகலாம் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications