கேஸ் சிலிண்டரில் திடீர்னு மாற்றம்.. இனிமேல் வீடுகள், கடைகளிலும் சமையல் சிலிண்டர் இப்படித்தான்.. சபாஷ்
சென்னை: கேஸ் சிலிண்டர்கள் குறித்து, முக்கிய அதிரடியை இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது.

இப்படித்தான் கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.. அதன்படி, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது... இந்த அயர்ன் பாக்ஸ், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்..
அயர்ன் பாக்ஸ்: வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த இஸ்திரியை பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தருகிறார்கள். விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால், இதன் சேவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை குறைவு: கடந்த 2018-லேயே இந்த அயர்ன்பாக்ஸ் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், விலை அதிகமாக இருந்தால், பெரிய வரவேற்பு அப்போது கிடைக்கவில்லை. ஆனால், இதை பயன்படுத்தியவர்கள், வழக்கமாக வரும் கரண்ட் பில்லை விட, டபுள் மடங்கு குறைந்த அளவுதான் செலவாகிறதாக சொன்னார்கள்.. ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா மட்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போது விலையும் குறைந்து, மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம்.
இந்நிலையில், இன்னொரு அதிரடியையும், தற்போது முன்னெடுத்து வருகிறது.. அதாவது, வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்கூடிய, சமையல் காஸ் சிலிண்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால், இரண்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது.
சிலிண்டர்கள்: இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் விற்பனை செய்கிறது.. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்..
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்கள்தான் பயன்படுத்துகின்றனர்.. அவை தரமற்று இருப்பதால் நிறைய விபத்துக்களை சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
அதனால்தான், இதற்கும் ஒரு சூப்பர் முடிவை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்துள்ளது.. அதன்படி, வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.. தனியாக உயர் அழுத்த மாறுபாடுகளை தாங்கும் திறனில் இந்த ரெகுலேட்டர்கள் உள்ளதாம்.. அத்துடன், ரப்பர் குழாயையும், இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது..
விரைவில் வருகிறது: இவைகளை தயாரித்ததுடன், ஆய்வு செய்து, அங்கீகாரமும் பெற வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள எல்பிஜி உபகரணங்கள் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறதாம். அங்கு அங்கீகாரம் கிடைத்ததுமே, உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications