கேஸ் சிலிண்டர் வேணுமா? இதெல்லாம் முக்கியம்.. அதைவிடுங்க, ஹேப்பி நியூஸ் விரைவில் சொல்லுதா மத்திய அரசு
சென்னை: புதிய கேஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிக்க போறீங்களா? அதற்கு என்னென்ன விண்ணப்பங்கள் தேவை தெரியுமா? ஏன் கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
ஏழை மக்களும், குறைந்த விலையில் சிலிண்டர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அந்த வகையில், நம்முடைய நாட்டை பொறுத்தவரை, எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 33 கோடியாக உள்ளது.

எல்பிஜி சிலிண்டர்கள்: இது வரும் 2025-26ம் வருடத்துக்குள் மேலும் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் சேர்க்கப்படும் என்று மதிப்பிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தகுதியான ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மற்றொருபுறம், மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் எம்பி தேர்தல் வரப்போவதால், எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கேஸ் விலையில் பிரதமர் மோடி அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அந்தவகையில், விரைவில் எல்பிஜி தொடர்பான அறிவிப்பும் வரக்கூடும் என்கிறார்கள். இந்த மானியம் ரூ.300 வரை இருக்கலாம் என்றும், அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் கார்டுகள்: இந்நிலையில், கேஸ் சிலிண்டர் பெறுவதில், சமீபத்தில் மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது. காரணம், சிலிண்டர் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் வந்தவண்ணம் இருந்தது.. எனவேதான், முறைகேடுகளை தடுக்கும் வகையில் கேஸ் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் கைரேகையை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதாவது, வருடத்துக்கு ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், ஒருவரே பல்வேறு கேஸ் நிறுவனங்களில் பல இணைப்புகள் வைத்திருப்பதாகவும், இதனால், முறைகேடாக மானியம் பெறுவதாகவும் புகார்கள் கிளம்புகின்றன.. அதனால்தான், இதனை தடுக்கும் வகையிலே, இந்த கைரேகை சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இணைப்புகள்: அதன்படி, கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது உட்பட அனைத்துமே தெரியவந்துவிடும்.. ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மானியமும் ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் கடிவாளம் போடப்பட்டளள்து.
இதுஒருபக்கமிருந்தாலும், புதிய கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கட்டாயம் தேவையாக உள்ளது.. அவை என்னென்ன தெரியுமா?
(ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக வைத்திருக்க வேண்டும்)
- பாஸ்போர்ட்
- ஆதார் அட்டை
- பான் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
- மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்படும் அடையாளச் சான்று
- டிரைவிங் லைசென்ஸ்
- போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ்புக்
(முகவரிக்கான சான்றாக இந்த ஆவணங்கள் தேவைப்படும்)
- ஆதார் கார்டு
- டிரைவிங் லைசென்ஸ்
- பாஸ்போர்ட்
- குத்தகை ஒப்பந்தம்/வாடகை ஒப்பந்தம்
- வாக்காளர் அடையாள அட்டை
- ரேஷன் கார்டு
- குத்தகை ஒப்பந்தம் -பயன்பாடு
- பில் (தொலைபேசி/மின்சாரம்/தண்ணீர் பில்) 3 மாதங்களுக்குள் சமீபத்திய பில்
- எல்ஐசி பாலிசி
- வங்கி அறிக்கை/கிரெடிட் கார்டு அறிக்கை
- வீட்டுப் பதிவு ஆவணம்
- கெஜட்டட் அதிகாரி மூலம் சான்றளிக்கப்பட்ட சுய அறிவிப்பு
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications