உங்க கிட்ட "2 கேஸ் சிலிண்டர்" இருக்கா? யார் பேர்ல இருக்கு? நேரா வீட்டுக்கு வர்றாங்க ஆபீசர்ஸ்.. கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேரடி ஆய்வினை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்களாம்.. ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

உரிமைத்தொகை: இப்படிப்பட்டசூழலில்தான், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். இதற்கான லிஸ்ட்களையும் அரசு தயாரித்து வருகிறது.. மற்றொருபக்கம் வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சல் கணக்குகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்காகவே முகாம்களை நடத்தி, அஞ்சல் திட்டத்தை துவக்கி வைத்து வருகிறது.
மருமகள்: இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.. இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம்.
ஆனால், எல்லாருக்குமே கார்டுகளை தந்துவிடுவதில்லை.. தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர்.
2 சிலிண்டர்: அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று பார்க்க துவங்கி உள்ளார்கள்.
புதிதாக திருமணம் ஆனவர்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய ரேஷன் கார்டில் இருந்து, அவரது பெயரை நீக்கி விட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லையாம்.. ஆனால், 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர்.. அதனால்தான் சமையலறை எத்தனை இருக்கிறது? சிலிண்டர் எத்தனை இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறது? என்ற விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள்..
அதிகாரிகள்: இந்த ஆய்வுப்பணிகள்தான் தமிழகத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதால், இவைகளை முடிப்பதற்கு 3 மாதம் காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.. இந்த பணி முடிந்த பிறகுதான், விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்கிறார்கள்.. ஆனால், எப்படி பார்த்தாலும், தகுதியான அடிப்படையிலேயே ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்பதில் மட்டும் அதிகாரிகள் உறுதியாக இருக்கிறார்களாம்..!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications