வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்!
சென்னை: மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் சூழ்நிலை உலகளவில் பல்வேறு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கம் தமிழகத்திலும் தென்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக சமையல் கேஸ் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்த பகுதி வழியாக நடைபெறும் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டது. உலகின் முக்கிய கடல் மார்க்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே எண்ணெய் மற்றும் எரிவாயு உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்தியாவுக்கும் எரிவாயு கொண்டு வரும் கப்பல்கள் தாமதமாகின. இந்த நிலைமையின் தாக்கமாக, தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படுகின்றன.

சமையல் கேஸ் தட்டுப்பாடு
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் முதன்மை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்படுவதால், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் பல பகுதிகளில் இந்த பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல சாலையோர உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வணிக சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடைகள் மூடல்
சில கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிலர் மாற்று வழியாக விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கிடைக்காததால், சில கடைகள் வீட்டு உபயோக சிலிண்டர்களையே நம்பி இயங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர்களும் நேரத்திற்கு கிடைக்காததால், கடை உரிமையாளர்கள் கடும் சிக்கலில் சிக்கியுள்ளனர். இந்த தட்டுப்பாட்டின் நேரடி தாக்கம் பொதுமக்கள் மீது விழுந்துள்ளது.
- குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?
- என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கும் ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
- கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?
- நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!
உணவுப் பொருள் விலை உயர்வு
சென்னை நகரின் சில பகுதிகளில் முன்பு ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கப் தேநீர் தற்போது ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் புறநகர் பகுதிகளில் ரூ.20க்கு விற்கப்பட்ட தேநீர் தற்போது ரூ.25 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சமோசா, பஜ்ஜி, போண்டா போன்ற சிற்றுண்டிகளின் விலையும் ரூ.35ல் இருந்து ரூ.40 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கலவை சாதம் உள்ளிட்ட உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளச்சந்தை
மேலும் சில உணவகங்களில், சாப்பாட்டு கட்டணத்துடன் கூடுதலாக கேஸ் செலவையும் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கள்ளச்சந்தையில் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வணிக சிலிண்டர்கள்
முன்பு ரூ.3,000 அளவில் கிடைத்த வணிக சிலிண்டர்கள் தற்போது ரூ.6,500 வரை உயர்ந்துள்ளதாகவும், அந்த விலைக்கும் பல இடங்களில் சிலிண்டர் கிடைக்காத நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த அதிக விலை சிறிய அளவிலான கடை உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதற்கிடையில் பொதுமக்களும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. முன்பு 21 நாட்களுக்கு ஒருமுறை கிடைத்த சிலிண்டர், தற்போது நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் பிறகே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கோரிக்கை
முன்பதிவு செய்த பின்னரும் உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்காததால், பல குடும்பங்கள் சிரமம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் தாக்கம், தமிழகத்தில் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!













Click it and Unblock the Notifications