அம்மாவை விட்டுட்டு சித்தியை திருமணம் செய்தார்.. நடிகர் கார்த்திக் குறித்து மகன் கவுதம் உருக்கம்
சென்னை: தனது அம்மாவை விட்டுவிட்டு சித்தியை திருமணம் செய்து கொண்டதால் அவரை விட்டு பிரிந்தோம் என நடிகர் கார்த்திக் குறித்து அவருடைய மகன் கவுதம் கார்த்திக் வேதனையுடன் தெரிவித்தார்.
நடிகர் கார்த்திக்.. நடிகர் முத்துராமனின் மகன். இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு நவரச நாயகன் என்ற பெயர் உண்டு. இவர் அழுகை, கோபம், காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட், காமெடி, உள்ளிட்ட ரசங்களை தனது நடிப்பில் கொட்டிவிடுவார்.

இவர் இதுவரை 125 படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் பீக்கில் இருந்த போதிலும் கார்த்திக்கிற்கு என ரசிகர்கள் பட்டாளம் இருந்தனர். அவருடைய காமெடிக்காகவே அவருடைய ரசிகர்களாகினர்.
இவரை காதல் நாயகன் என்றும் ரசிகர்கள் அழைத்தனர். பொதுவாக கார்த்திக்குடன் நடிக்கும் நடிகைகளுடன் அவரது பெயர் கிசுகிசுக்கப்படும். ஆனால் முதல் முறையாக ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலை யாராலும் நம்ப முடியவில்லை. சோலைக்குயில் படத்தில் நடித்த ராகினியுடனும் கிசுகிசுக்கப்பட்ட கார்த்திக், திடீரென அவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கவுதம் கார்த்திக், கேய்ன் கார்த்தி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு ராகினியை திருமணம் செய்து கொண்ட கார்த்திக், அவருடைய தங்கை ரதியையும் திருமணம் செய்து கொண்டார். அதாவது ராகினியுடன் 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அதன்பிறகு ரதியை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் கார்த்திக்குடன் வாக்குவாதம் செய்த ராகினி தனது சொந்த ஊரான ஊட்டிக்கே வந்துவிட்டார். அங்கு எப்போதாவது ராகினியையும் குழந்தைகளையும் பார்க்க கார்த்திக் வருவார். இந்த நிலையில் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தற்போது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கார்த்திக் போல் கவுதமிற்கு திரைத் துறை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் தனது தந்தையுடனான பிரிவு குறித்து கவுதம் கார்த்திக் மனம் நொந்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். கவுதம் கூறுகையில் அப்பா சித்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால்தான் அம்மா அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
அம்மா, அப்பா இருவரும் பிரிந்துவிட்டதால் நானும் தம்பியும் தனிமையில் வாடினோம். பிறகு அப்பா சென்னையில் இருந்ததால் நானும் தம்பியும் ஊட்டியில் அம்மாவுடன் இருந்தோம். ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அப்பா போன் செய்வார். எப்போதாவதுதான் எங்களை பார்க்க வருவார். என் அம்மாதான் என்னையும் தம்பியையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவ்வாறு தனது தாய், தந்தை பிரிவு குறித்து கவுதம் கார்த்திக் வேதனையுடன் தெரிவித்தார். கார்த்திக் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரதிக்கு தீரன் என்ற ஒரு மகன் உள்ளார்.












Click it and Unblock the Notifications