Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சாதி இல்லாம படம் பண்ண முடியாதா!” ஆங்.. சார் பேரு என்ன? கவுதம் வாசுதேவ் 'மேனன்!!' விளாசும் நெட்டிசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், "சாதி இல்லாம படம் பண்ண முடியாதா? சாதியை காட்டும் படங்கள் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார்.

இவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்நிலையில், இது குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸில்' வெளியான கட்டுரை கவனம் பெற்றிருக்கிறது.

Gautham Vasudev Menon Cinema

கட்டுரையை தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளர் ஆனந்த் சுரேஷ் எழுதியிருக்கிறார். இக்கட்டுரை கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் குறித்து விரிவாக விமர்சித்து எழுதப்பட்டிருக்கிறது.

யதாரத்தமும், அழகியலும் கைகூடும்போது ஒரு படைப்பு, ரசிகர்களால் தலையில் தூக்கி வைக்கப்பட்டு கொண்டாப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்று மிஸ்ஸானாலும் கூட, வேலைக்காகாது. அப்படி வேலைக்கு ஆகாத ஒரு இயக்குநராக கௌதம் வாசுதேவ் மாறியிருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கெளதம் பேசியது என்ன?:

"இன்றைய காலத்தில் சாதி இல்லை என்றாலும் கூட, 70-80களில் இருந்த நிலைமையை குறிப்பிட்டு, சாதியை கருவாக வைத்து படம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த மாதிரியான கதைகள் இனி தேவையே இல்லை. 80களை தவிர்த்துவிட்டு இன்றை சூழலை மையப்படுத்தி இதுபோன்ற கதையை சொல்ல முடியாது. யாருக்கும் அது தேவையில்லை" என்று Behindwoods TVக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கௌதமின் படங்கள் எப்படியானது?:

'மின்னலே' படத்திலிருந்து வருவோம். ஒரு பெண்ணை பின்தொடர்வது, அவரை பற்றிய தகவல்களை சேகரிப்பது, ஆள்மாறாட்டம் செய்வது இவையெல்லாம் இன்று சட்டவிரோதம். இந்த குற்றத்திற்கு சில மாதங்கள் தொடங்கி சில வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், தலைவன் கௌதம் வாசுதேவ், இதையெல்லாம் 'காதல்' என்று நம் காதில் பூ சுற்றியிருந்தார். இந்த படத்தின் ஹீரோ மாதவனை வைத்து தனது மூளையில் இருந்த அபத்தங்களை கௌதம் கக்கியிருப்பார்.

படத்தின் ஒரு சீனில், மாதவன் சைவ பிராமணர் என்று தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இன்னொரு சீனில், "என் காலேஜில அவ்வளவு பொண்ணுங்க இருந்தாங்க. ஆனால் யாரை பற்றியாவது நான் இதுக்கு முன்னர் பேசியிருப்பேனா? அவ்வளவு ஏன் சிதம்பரத்தைச் சேர்ந்த இரண்டு அழகான 'ஐயர்' பொண்ணுங்களும், ஒரு அட்டகாசமான கேரளா பொண்ணும் இருந்தாங்க. நான் யாரையும் ஃபாலோ செய்யல" என்று ஒரு டையலாக் வரும்.

அப்படியெனில் அழகு என்றால் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள்தான் என்பதை கௌதம் சொல்ல வருகிறாரா? என்று கேள்வி எழுகிறது. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் கிறங்கடிக்கும் இசையில் இதையெல்லாம் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. 'காதலிலும் போரிலும் எல்லாம் நியாயம்' என்கிற சொத்தையான பழமொழியை நியாயப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருக்கும். இப்படம் 'ரெஹ்னா ஹை டெர்ரே தில் மெய்ன்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில், ஹீரோ பெயர் 'மாதவ் சாஸ்திரி' என்பது கூடுதல் தகவல்.

காக்கி சட்டை காதலர் கௌதம்:

காவல்துறை நடத்தும் சட்டவிரோத என்கவுண்ட்டர்கள் குறித்து உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் இருந்து வருகின்றன. ஆனால் நம்மாளு, காக்கி சட்டை மீது காதல் கொண்டு, அதற்காகவே பல திரைப்படங்களை எடுத்து வைத்திருக்கிறார். 'காக்க காக்க' என்பது இந்த லிஸ்ட்டில் முதலில் உள்ள படத்தின் பெயர். ஹீரோ சூர்யா யாருக்கும் கட்டுப்படமாட்டார். போலீஸ் அதிகாரிதான். ஆனால் மண்டை சூடாகிவிட்டால் துப்பாக்கியை எடுத்து வாயில் வைத்துவிடுவார். அப்புறம் எதுக்குங்க நீதிமன்றம், சட்டமெல்லாம்?

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக பேசும் மக்கள், குற்றவாளியை கொல்ல வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர, குற்றம் இனி நடக்காமல் இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என கேட்பதில்லை. இப்படியான சிந்தனை மக்களை ஆக்கிரமித்ததற்கு தலைவன் கௌதம் வாசுதேவ்தான் காரணம். காக்க, காக்க முதல் காரணம். இந்த படத்தில் கொளதம் ஒரு சிறப்பு ரோலில் நடத்திருப்பார். அதில் அவருடைய பெயர் கௌதம் 'நாயர்'.

காதுகள் பாவமில்லையா கௌதம் சார்?:

காக்க காக்க படத்தை தொடர்ந்து, 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு கௌதம் வந்தார். இந்த கதையில் குற்றவாளிகளை தன்பாலின ஈர்ப்பாளர்களாக சித்தரித்ததன் மூலம், அந்த சமூகத்தையே களங்கப்படுத்தியிருக்கிறார். இந்த பாலினத்தை சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாத்தான் இருப்பார்கள் என்கிற தவறான கருத்தியலை உருவாக்கியதில் 'வேட்டையாடு விளையாடு' படம் முக்கிய பங்கு வகித்தது. போதாத குறைக்கு இந்த படத்திலும் என்கவுண்ட்டர்கள் தெறிக்கவிட்டன. காதுகள் பாவமில்லையா கொளதம்?

கொளதமின் அரைகுறை சுயசரிதை - வாரணம் ஆயிரம்!:

இந்த படத்தில் ஹீரோவுக்கு பார்த்தவுடன் ஹீரோயினை பிடித்துவிடுகிறது (பெண்களை குருகுரு-னு பார்ப்பது குற்றம்). எனவே அமெரிக்கா வரை ஹீரோயினை ஃபாலோ செய்து போகிறார். படத்தில் ஹீரோவின் அப்பா கேரக்டரும் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு வாரம் ஃபாலோ செய்து சிம்ரனை காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துவிடுவார். ஃபாலோ செய்வதே சட்டவிரோதம், அதை அவர் மகனுக்கு சொல்லி கொடுத்து அமெரிக்கா வரை சமீரா ரெட்டியை ஃபாலோ செய்ய வைத்தது அதைவிட பெரிய குற்றம்.

டாக்ஸிக் தாண்டி வருவாயா கௌதம்?:

கௌதம் வாசுதேவ் படைப்பில், மிகவும் டாக்ஸிக்கான படமாக 'விண்ணை தாண்டி வருவாயா' இருக்கிறது என மூத்த பத்திரிகைளயாளர் ஆனந்த் சுரேஷ் காட்டமாக விமர்சித்திருக்கிறார். 'ஓமன பெண்ணே' பாடலில் வரும் ஒற்றை சீன் போதும், படம் எவ்வளவு நச்சுத்தன்மையுடன் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள. காதலிக்கும் பெண்ணின் அனுமதியின்றி, அவளை முத்தமிடுவது சரி என்கிற டோனில் பாடலின் காட்சிகள் அமைந்திருக்கும்.

இன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை கொடுமைகளும் காதல் என்கிற பெயரில்தான் தொடங்குகின்றன. அதற்கு அச்சாரம் போட்டது கௌதம்தான். அவரின் திரைப்படங்களிலிருந்து ஏராளமான உதாரணங்களை இதுபோல அடுக்க முடியும் என பத்திரிகையாளர் கடுமையாக சாடியுள்ளார். அதேபோல ஒரு நேர்காணலில் கௌதம் வாசுதேவ் ஓகே, மேனன் என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா? என்கிற டோனில் கேள்வி எழுந்தபோது, அது தனது குடும்ப பெயர் என இவர் சமாளித்திருந்ததையும் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆக இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு, சாதியை குறித்து இப்படி பேசலாமா என, கௌதம் வாசுதேவ் மேனனை நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+