மோசம்.. அருவெறுப்பு.. அண்ணாமலை தலைமைக்கு கீழ்தான் "இப்படி".. போலீசுக்கு மெசேஜ் அனுப்பிய காயத்ரி
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கடுமையான புகார்களை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம் வைத்து இருக்கிறார்.
தமிழக பாஜகவில் நிலவி வந்த பனிப்போர் தற்போது உட்கட்சி மோதலாக வெடித்து உள்ளது. குழாயடி சண்டை போல ட்விட்டரில் பாஜக நிர்வாகிகள் மாறி மாறி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
ஒரு பக்கம் திருச்சி சூர்யா- டெய்சி ஆடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் திருச்சி சூர்யா தன்னிடம் தவறாக பேசிய வீடியோக்கள் இருப்பதாக அலிஷா அப்துல்லா கடுமையான புகார்களை வைத்து இருந்தார்.

மோதல்
இந்த மோதல் எல்லாம் தொடங்கியது உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் வெளிப்படையாக பேச தொடங்கியதில் இருந்துதான். பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற போது பாஜகவின் கலைப்பிரிவு தலைவராக இருந்தார் காயத்ரி ரகுராம். அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு எந்த பதவியும் இன்றி இருந்தார். தனக்கு பதவி இல்லை, எனக்கு போதிய ஆதரவு கட்சியில் இல்லை என்று காயத்ரி விமர்சனங்களை வைத்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அயலக தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

உச்சம் அடைந்த மோதல்
இதையடுத்து காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணாமலை இவரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மோதல் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பாஜக தலைகள் சென்ற நிலையில், இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி காயத்ரி இருக்கும் துறைக்கு தொடர்பான நிகழ்ச்சி என்றாலும் அவரை அழைக்கவில்லை. இதை பற்றி காயத்ரி இணையத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில்தான், அதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் காட்டமாக பதில் அளித்தனர். சில ட்விட்டர் ஐடிக்கள் காயத்ரியை கடுமையாக விமர்சனம் செய்தது.

குற்றச்சாட்டு
இதையடுத்து இந்த ஐடிகளுக்கு பின் பாஜக நிர்வாகி செல்வகுமார் மற்றும் கும்பல் இருப்பதாக காயத்ரி குற்றச்சாட்டு வைத்தார். முக்கியமாக அண்ணாமலைக்கு கீழ் ஒரு வார் ரூம் செயல்படுகிறது. அந்த வார் ரூம் என்னை குறி வைத்து தாக்குகிறது. பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களை குறி வைத்து தாக்குகிறது என்று விமர்சனம் வைத்து இருந்தார். அதோடு நிற்காமல், அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் சில விமர்சனங்களையும் வைத்தார். தமிழ்நாடு பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். கட்சி உள் விவகாரங்களை வெளிப்படையாக ட்விட் செய்து விமர்சனம் வைத்தார்.

மோதல்
இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர். இந்த நிலையில்தான் திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரணிடம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதுவும் கூட அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் - காயத்ரிக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

என்ன?
இதன்பின்பும் அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி தொடர் புகார்களை வைத்து வந்தார். இதனால் இணையத்தில் இவர்களுக்கு இடையில் கடுமையான சண்டையும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான பர்சனல் அட்டாக் மேற்கொள்ளப்படுகிறது. வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. தமிழ்நாடு போலீஸ் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் வைக்கிறார்கள், என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். அதோடு இந்த ட்விட்டில் போலீசாரை டேக் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications