என்னாது பாஜகவின் உள்கட்சி விவகாரமா.. அப்போ இதெல்லாம் என்ன? அண்ணாமலையை விடாமல் சீண்டும் காயத்ரி
சென்னை: என் பிரச்சினை குறித்து நான் கட்சியில் முறையிட்ட போது அதை தீர்க்க ஒருவரும் முன்வரவில்லை என பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் ஆணாதிக்க உலகில் அடிபணிந்து வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா சிவா தனது அலுவலகத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை அனுப்பியதாக வந்து தன்னிடமும் ஆபாசமாக பேசினார், தன் உடை குறித்து உடல் அங்கங்கள் குறித்தும் பேசியிருந்தார் என்றும் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து காயத்ரி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: அண்ணாமலையின் வார் ரூம் தாக்குதல்கள்காரர்களின் வியூகம் பெண்கள் குறித்து அவதூறுகளை பரப்புவதே ஆகும். அலிஷா அப்துல்லா பொது வெளியில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுகிறார் என்றால், அது எனக்கு ஏன் மறுக்கப்படுகிறது?

150 பேர்
துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை என்னை பற்றி அவதூறாக பேசியிருந்தார். அவர் தற்போது ஐயப்ப மாலை போட்டுள்ளதால் அதுகுறித்த உண்மையை சொல்ல வேண்டும். அவர் பொய் சொல்ல மாட்டார். எந்த பெண்ணையும் அவமதிக்கும் செயல்களை நான் அனுமதிக்க மாட்டேன். அலிஷாவை கட்சி அலுவலகத்திலேயே பேட்டி அளிக்க வைத்துள்ளீர்கள்.

நம்பிக்கை இல்லை
இதே சமஉரிமையை எனக்கு ஏன் தரவில்லை என காயத்ரி சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தார். காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட்டிற்கு நெட்டிசன் ஒருவர் மேடம், மக்கள் உங்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். பாஜக நிர்வாகி எச் ராஜாவின் நேர்காணலை போய் பாருங்கள். கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை ஒரு போதும் பொதுவெளியில் பேசக் கூடாது. அதை நீங்கள் செய்துள்ளீர்கள் என்றால் உங்கள் நோக்கம் தெள்ள தெளிவாக தெரிகிறது. இனியும் உங்களை நம்ப தயாராக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
இந்த ட்வீட்டிற்கு காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இது பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்றால், என் புகாருக்கு ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? புகார் கூறியவுடனேயே என் பிரச்சினைக்கு உள்ளுக்குள்ளேயே தீர்வு காணப்பட்டிருக்க முடியும். ஆனால் யாரும் முன் வரவில்லை. நான் மட்டுமே விசாரணைக்கு தயாராக இருந்தேன். தான் அவமானப்படுத்தப்படுவதையும் குறி வைக்கப்படுவதையும் எந்த பெண்ணும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். ஆணாதிக்க உலகத்திற்கு நான் அடிபணிய மாட்டேன்.

காயத்ரி சரமாரி கேள்வி
ஒரு பெண் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து கூறும் போது அவரை அமைதியாக இருக்க சொல்கிறார்கள். இந்து தர்மத்தை பின்பற்றும் மக்கள் தர்மத்தின் மீது நம்பிக்கை வைக்கட்டும். நீதியின் பக்கம் நீங்கள் நின்றிருந்தால் நல்லது. வாழாவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களை வாழ விடுங்கள். இப்போது வரை நான் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன் என காயத்ரி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு எதிரான கருத்து
காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவர் கூறும் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்கு அவர் பதிலளித்து வருகிறார். மீண்டும் மீண்டும் தவறு செய்தால் அதற்கு விசாரணையே தேவையில்லை என்றும் பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள். இன்னும் சிலர் காயத்ரிக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்கள்.
-
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
“தேதி குறித்து கள் இறக்குவேன்.. என்னை சுடுங்க பார்க்கலாம்..” ஆலங்குளம் தொகுதியில் சீமான் சவால்!












Click it and Unblock the Notifications