அண்ணாமலை மீது கோபம்.. அமித்ஷாவுக்கே கவுன்ட்டர் கொடுக்கும் காயத்ரி! பாஜக எதிர்ப்பாளராவே மாறிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதான கோபத்தால் அவர் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்த நடிகை காயத்ரி தற்போது அமித்ஷா, பாஜக மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி இருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜகவின் என் மண் என் மக்கள் என்ற பெயரிலான பாத யாத்திரை தொடக்க விழாவில் அமித்ஷா உரையாற்றிபோது தெரிவித்த கருத்துக்களை நேரடியாகவே விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் காயத்ரி ரகுராம். திருச்சி சூர்யா, டெய்சி இடையிலான பிரச்சனை தொடர்பாக வெளிப்படையாக விமர்சித்ததால் காயத்ரி ரகுராம் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்தது.

Gayathri Raghuram criticising BJP, Amit shah after anger towards Annamalai

அதன் பின்னர் அண்ணாமலையையும், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளையும் கடுமையாக சாடி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் காயத்ரி. நாளடைவில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் விமர்சிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு பாஜக தலைவரின் இந்த யாத்திரை தொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், "மணிப்பூரில் என்ன நடந்தாலும் அதன் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் அது மிகவும் கொடூரமானது. பாரத் மாதா கீ ஜெய் சொன்னால் மட்டும் போதாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேதனைப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று அமித்ஷா தெரிவித்த கருத்துக்களையும் ட்விட்டரில் விமர்சித்து உள்ளார் காயத்ரி ரகுராம். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்திட அண்ணாமலை இந்த யாத்திரையை முன்னெடுத்துள்ளார் - அமித் ஷா

ஜேஜே அம்மாவுக்கும் எம்ஜிஆர் அய்யாவுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது இதுவே முதல் முறை. இது அதிமுகவுக்கு ஆபத்தானது. கட்சியை கைப்பற்றுவது என்பது நேரடியான அல்லது மறைமுகமான செய்தியாகும். நான் இதை எப்படி பார்க்கிறேன். முதலில் அண்ணாமலை தன்னை ஜேஜே அம்மா மற்றும் எம்ஜிஆர் அய்யாவுடன் ஒப்பிட்டார்.

இப்போது அமித் ஷாஜி கூறுகிறார் ஜே.ஜே.அம்மாவும், எம்.ஜி.ஆரும் தமிழகத்திற்குக் கொடுத்த ஏழைகளுக்கான திட்டங்களை அவர்கள் மக்களுக்குச் சொல்கிறார்கள். ஏன்? என்ன நோக்கத்திற்காக? இது அதிமுகவின் சாதனையல்லவா? இப்போது கையகப்படுத்திய பிறகு அதை பாஜகவின் திட்டம் என்று சொல்வார்கள்.

நீங்கள் அனைவரும் இதை எப்படி பார்க்கிறீர்கள்? பாஜகவின் இரட்டை வேடத்தை அதிமுக மறந்துவிடக் கூடாது. அண்ணாமலை முகத்தை எங்கே வைத்திருப்பார்?" என்று குறிப்பிட்டு உள்ள அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசு மிகவும் ஊழல் நிறைய அரசு என அமித்ஷா சாடிய செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதேபோல், அண்ணாமலையின் ஒரு ட்விட் போட்டால் ஆட்சிக்கே பூகம்பமே ஏற்படுவதாக அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டிய காயத்ரி, "அண்ணாமலையின் ட்வீட்டைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே சிரிக்கும்போது அந்த அதிர்வு பூகம்பம் போல் தான் இருக்கும். யாரோ ஒருவர் தினமும் உங்களுக்கு தவறான தகவல்களைத் தருகிறார், அமித்ஷா ஜி.

இந்த கோமாளி துண்டை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு ட்வீட் பூகம்பத்தை உருவாக்கும் என்றால், ஏன் பாத யாத்திரை? செய்தியை ஒரு ட்வீட்டில் அனுப்பலாம். இந்த கோமாளியை தமிழ்நாட்டில் யாரும் அறிய விரும்பவில்லை, அவருடைய சுரண்டல் சேவை யாருக்கும் தேவையில்லை." என்று விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+