“ஹனி ட்ராப் டூ வார் ரூம்”.. அண்ணாமலையை கைது செய்யாதது ஜனநாயக விரோதம் - பூகம்பம் கிளப்பும் காயத்ரி
"அண்ணாமலை நீங்கள் தாமதத்திற்கு ₹29,000 கேட்டீர்கள். ஏழைப் பெண்மணிகளுக்கு போலி ஆருத்ரா தங்க நிறுவனத்தின் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுங்கள்."
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விமர்சித்து மீம் வீடியோ வெளியிட்ட வாய்ஸ் ஆப் சவுக்கு ட்விட்டர் கணக்கின் அட்மின் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளது குறித்து காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு பட்ஜெட் உரையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகரான கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
பட்ஜெட்டில் வெளியான அந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில மீம்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

பெண்களை அவமதிக்கும் வீடியோ
குறிப்பாக சவுக்கு சங்கரின் பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வரும் Voice of Savukku என்ற ட்விட்டர் பக்கத்தில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவையை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிடிஆருடன் ஒப்பிட்டு மீம் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது. அது பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி அதனை பகிர்ந்த அட்மின் பிரதீப் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அண்ணாமலை ட்வீட்
இதனை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, "அனைத்து பதவிகளும் ஒரே குடும்பத்துக்கு வழங்கப்படும்போது ஜனநாயகம் என்பது எதேச்சதிகாரம் ஆகிவிடுகிறது. இதுவரை இல்லாத வகையில் இது சர்வாதிகார அரசாக உள்ளது. ஒருவர் ட்ரோல் வீடியோவை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டால், திமுக ஐடி விங்கில் இருப்பவர்களையும் சிறையில் அடைக்கவேண்டும்.

திமுகவின் வேண்டுகோள்
திமுக ஐடி விங் முழு நேர வேலையாக இதை செய்து வருகிறார்கள். தமிழ்நாடு காவல்துறையோ வாய்ஸ் ஆஃப் சவுக்கு அட்மினை கைது செய்து இருப்பது ஆச்சரியம் தருகிறது. கைது செய்வதற்கு தகுதியற்ற குற்றம் என்று தெரிந்தும் திமுகவின் பேச்சை கேட்டு தமிழ்நாடு காவல்துறை அவரை கைது செய்து இருக்கிறது.

பாசிசத்தின் அடையாளர்
நள்ளிரவு கைதுகள், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் எந்த சாதனைகளையும் செய்யாமல் தங்களை பற்றி சுய விளம்பரங்களை செய்வதுதான் உண்மையான பாசிசவாதிகளின் அடையாளம் திரு முக ஸ்டாலின்." என்று தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "தமிழக பாஜக தோல்வியடைந்த தலைவர் அண்ணாமலை வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் பிரதீப் போன்ற நபரை ஆதரிக்கும் போது, அதிக பெண்கள் தமிழக பாஜகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களுக்காக அண்ணாமலை எப்போதும் குரல் எழுப்பி வருகிறார், ஏனெனில் அண்ணாமலை பெண்களைப் பற்றி அவதூறு செய்யும் பழக்கம் கொண்டுள்ளார்.

வயிறு எரிகிறது
அண்ணாமலைக்கு வார்ரூம் சிக்கல். அது ஜனநாயகம் அல்ல. எல்லை மீறும் மற்றவர்களை இழிவுபடுத்தும் குழு என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு ₹1000 அறிவித்த பிறகு வயிறு எரிகிறது. அண்ணாமலை நீங்கள் தாமதத்திற்கு ₹29,000 கேட்டீர்கள். ஏழைப் பெண்மணிகளுக்கு போலி ஆருத்ரா தங்க நிறுவனத்தின் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுங்கள்.

அண்ணாமலையை ஏன் கைது செய்யவில்லை?
அண்ணாமலை அவரது ஹனி ட்ராப்க்காகவும், வெறுப்பை பரப்பியதற்காகவும், பிறர் அவதூறாக பொய்களை பரப்புவதற்காகவும் இன்னும் கைது செய்யப்படாதது ஜனநாயக விரோதமானது. (உதாரணம் லாவண்யா பிரச்சினை, ஸ்ரீமதி பிரச்சினை, பீகார் தொழிலாளர், ஹரிஷ் போன்ற குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்). வார்ரூம் தொற்று, குண்டர்கள் மற்றும் அடியாட்களுக்கு மட்டுமே அவர் அதிகாரம் கொடுக்கிறார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications