சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’கதவு’ பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை.. பயணிகளுக்குமா? ட்விட்டரில் விடாமல் சீண்டும் காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

சென்னை : அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது என பாஜகவில் இருந்து விலகிய நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் மிகத் தீவிரமாக அரசியல் செய்து வந்த கட்சியின் கலை கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார்.

இதனால் அவர் மாநில தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் பின்னர் மீண்டும் வெளிநாடு அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தலைமையுடன் மோதல் போக்கையே கையாண்டு வந்தார்.

’திமுக ஸ்லீப்பர் செல்’ பைத்தியம்னு சொல்றாங்க! அண்ணாமலையை விடாமல் மீண்டும் சீண்டும் காயத்ரி ரகுராம்! ’திமுக ஸ்லீப்பர் செல்’ பைத்தியம்னு சொல்றாங்க! அண்ணாமலையை விடாமல் மீண்டும் சீண்டும் காயத்ரி ரகுராம்!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இந்நிலையில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், இதே விவகாரத்தில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ட்விட்டர் போர்

ட்விட்டர் போர்

இதனையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்க, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்தது. அப்போதிலிருந்து தற்போது வரை ஏதாவது ஒரு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் தொடர்ந்து ட்விட்டரில் விமர்சித்து வருகிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேட்டிருந்தார்.

எமர்ஜென்சி கதவு

எமர்ஜென்சி கதவு

இந்நிலையில் இண்டிகோ விமானத்தின் கதவு திறக்கப்பட்ட விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறார். இது தொடர்பாகவும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இண்டிகோ விமானத்தின் அவசர கதவு திறக்கப்பட்டது குறித்து அண்ணாமலையை குற்றம் சாட்டி அடுத்தடுத்து ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார் காயத்ரி. அதில்,"நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி?

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கைபார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்.அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்." என பதிவிட்டுள்ளார்.

English summary
Actress and choreographer Gayathri Raghuram, who left the BJP, posted on Twitter that she thought there was no safety for women under the leadership of Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X