அப்பப்பா என்ன ஒரு எளிமை.. 1 கோடி காராம்ல.. அண்ணாமலையை சீண்டிய காயத்ரி.. பாஜகவினர் கொடுத்த பதிலடி!
சென்னை: அண்ணாமலை, நெடுஞ்சாலை ஓரத்தில் காரில் அமர்ந்தபடி இரவு உணவு சாப்பிடும் புகைப்படம் பாஜகவினரால் பரப்பப்பட்ட நிலையில், 1 கோடி ரூபாய் கார் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும், சட்டமன்றத் தொகுதி வாரியாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கி தற்போது கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி, சூலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் (அக்டோபர் 19) இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.

பின்னர், சோமனூர் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக காரை நிறுத்தி அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் இரவு உணவை சாப்பிட்டனர். காரில் அமர்ந்தபடியே அண்ணாமலை, வானதி சீனிவாசன், ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் பாக்கு மட்டை தட்டில் வைத்து சாப்பிடுவது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து, அண்ணாமலையின் எளிமையைப் பாருங்கள் என புளகாங்கிதம் அடைந்தனர் பாஜகவினர்.
இந்நிலையில், அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம், "1 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர். எப்படி? மாருதி 800 இல் ஏன் செல்லக்கூடாது? அது பாஜகவினரின் தர்க்கம். அவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயி தானே, பயணத்திற்கு மாருதி 800 ஐ கூட விரும்புவார் இல்லையா. 2.5 ஆண்டுகளுக்குள் எவ்வளவு விலை உயர்ந்த கார்? இந்த டுபாக்கூர் 420மலை இதில் கருணாநிதி குடும்பத்தை ஊழல்வாதிகள் என்று கேலி செய்து அவர்களின் குடும்ப கார்கள் மீது கண் வைத்தனர்.
₹1 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர். எப்படி? மாருதி 800 இல் ஏன் செல்லக்கூடாது? அது அவர்களின் (பாஜகவின்) தர்க்கம். அவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயி தானே, அவர்களின் பயணத்திற்கு மாருதி 800 ஐ கூட விரும்புவார் இல்லையா. 2.5 ஆண்டுகளுக்குள் எவ்வளவு விலை உயர்ந்த கார்?… pic.twitter.com/R5XlRpVRLr
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) October 20, 2023
ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது. இதில் சிம்ப்ளிசிட்டி ஹேர்சிட்டி என்று வேறு அழைக்கிறார்கள். பிறர் ஆடம்பர வாழ்க்கை முறையில் பொருட்களை சம்பாதிப்பதை பார்த்து பொறாமை கொண்டவர் அண்ணாமலை மற்றும் பிறர் வருமானம் சொத்துக்கள் மற்றும் ஊழல்களை சுட்டிக் காட்டுகிறார் அண்ணாமலை. ஆனால் அண்ணாமலை இன்று வரை விவரிக்க முடியாத சொத்துக்களையும் ஊழலையும் கொண்டுள்ளார். இன்று வரை பதில் இல்லை." என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பாஜகவினர், இந்த கார் டொயோட்டா வெல்ஃபயர் காரே இல்லை. இது கியா கார்னிவெல் கார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள், அதுபோல இருக்கிறது உங்கள் ட்வீட் என பதிலடி கொடுத்துள்ளனர். இன்னும் பலர், அந்த கார் அண்ணாமலைக்கு சொந்தமானது அல்ல, கோவையைச் சேர்ந்த தொழிலதிபரான ஒரு பாஜக பிரமுகரின் கார், அண்ணாமலை நடைபயணத்திற்காக தற்காலிகமாக கொடுத்துள்ளார் எனக் கூறியுள்ளனர்.
பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம், கடந்த பல மாதங்களாகவே அண்ணாமலையை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். பாஜகவில் இருந்தபோது அண்ணாமலை - காயத்ரி இடையேயான உரசல் காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார் காயத்ரி. அப்போது முதல் சரமாரியாக அண்ணாமலையை விளாசி வரும் காயத்ரி, இப்போது அண்ணாமலைக்கு இவ்வளவு விலை மதிப்புள்ள கார் வந்தது எப்படி எனக் கேட்டு சீண்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications