அண்ணாமலை காலை குளிர்விக்க தினமும் 80,000 லிட்டர் தண்ணீர் கொட்டி ஊற்றப்படுது! கொந்தளிக்கும் காயத்ரி
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தென் மாவட்டங்களில் யாத்திரை சென்றுள்ள நிலையில், அவர் நடக்கும் பாதையில் தினமும் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொட்டப்படுவதாக நடிகை காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்! என் மக்கள்! என்ற பெயரில் பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் நேற்று தொடங்கினார். இதில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாத யாத்திரையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தொடக்கத்தில் பாத யாத்திரை என்று சொல்லப்பட்ட நிலையில், இதற்காக சொகுசு வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அண்ணாமலை அதில் பயணம் செய்வார் என்றும், தினமும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே நடப்பார் என்று செய்திகள் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நாங்கள் பாத யாத்திரை என்று சொல்லவில்லையே என விளக்கம் அளித்தார்.
ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் யாத்திரை, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. ராமநாதபுரத்தை தொடர்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்ற அண்ணாமலை, அதை தொடர்ந்து மதுரைக்குள் நுழைந்தார். அங்கு பல பகுதிகளுக்கு சென்று மக்களை அவர் சந்தித்த நிலையில், திடீரென கடந்த 6 ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட்டார்.
திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டமும் இதனால் ரத்து செய்யப்பட்டது. 2 நாட்கள் யாத்திரை நடைபெறாத நிலையில் டெல்லியில் இருந்து திரும்பியவுடன் மீண்டும் அவர் யாத்திரை தொடங்கினார். மதுரையில் யாத்திரையை முடித்துக் கொண்டு விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் யாத்திரை சென்ற அவர், அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் யாத்திரைக்காக தினமும் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் கொட்டப்படுவதாக பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு உள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "அண்ணாமலை நடைபயணத்துக்காக 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வேஸ்ட். தினமும் 1/2 கிலோமீட்டர் நடக்க 80,000 லிட்டர் தண்ணீர் வீணாகி, சாலையை குளிர்விப்பதற்காக தரையில் ஊற்றப்படுகிறது.
யார் இவ்வளவு பணம் ஸ்பான்சர் செய்கிறார்கள்? பாஜகவுக்கு இவ்வளவு பணம் எப்படி வருகிறது? அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு பணம் வருகிறது? கமிஷன், ஊழல், வசூல் இல்லாமல் இவ்வளவு விலை உயர்ந்த பாவ யாத்திரை நடக்காது. இவர் எப்படி தேச பக்தர் ஆக முடியும்? ஏழை மக்களை எப்படி காப்பாற்ற முடியும்?

தண்ணீருக்காக எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றனர் தெரியுமா? அவருக்கு தண்ணீர் பஞ்சம் தெரியுமா? அவருக்கு ஏதாவது தெரியுமா? அவர் மிகப்பெரிய ஆடம்பர முட்டாள். 5 அடியாள், தொண்டர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. அந்த 5 அடியாள் தான் பாவ யாத்திரையில் ஜிகிச்சிக்கா ஜிகிச்சிக்கா சிக்கா என்று மகிழ்ச்சியாக இருக்கிறான், ஆடம்பரமாக அனுபவித்து வருகின்றனர்.
அண்ணாமலை நடைபயணத்துக்காக 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வேஸ்ட். தினமும் 1/2 கிலோமீட்டர் நடக்க, 80,000 லிட்டர் தண்ணீர் வீணாகி, சாலையை குளிர்விப்பதற்காக தரையில் ஊற்றப்படுகிறது. யார் இவ்வளவு பணம் ஸ்பான்சர் செய்கிறார்கள்? பாஜகவுக்கு இவ்வளவு பணம் எப்படி வருகிறது? அண்ணாமலைக்கு எப்படி…
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) August 16, 2023
பணம் மற்றும் பாட்டில்களுக்காக ஸ்டிங் ஆப்பரேஷனைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என செய்தி. பாவம் மற்றவர்கள். 50 போலீஸ், 12 இசட் செக்யூரிட்டிகள் பாவ யாத்திரையில் கூட்டமாக பார்க்கப்படுகின்றனர். 80,000 லிட்டர் தண்ணீர் தரையில் வீணாவதை பொதுமக்கள் பார்த்தார்கள். அவர்கள் முகம் சுளிக்கின்றனர். இது மக்களை முட்டாளாக்குவது. யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications