குடிபோதையில் வாகனம் ஓட்டினேனா.. பதிலளித்து காயத்ரி ரகுராம் பரபரப்பு வீடியோ
Recommended Video

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், தான் மது அருந்தவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது, காயத்ரி ரகுராம் மது குடித்து வாகனம் ஓட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த விவகாரத்தை மறுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

வீடியோ
ட்விட்டரில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: என்ன நடந்தது என்பது எனக்கும் எனது தாயாருக்கும் எனது கூட இருந்தவர்களுக்கும் தெரியும். போலீஸ் என்னை வாகனத்திலிருந்து இறங்கி வீட்டுக்கு செல்லுமாறு சொல்லவும் இல்லை. அப்படி குடி போதையில் நான் வரவும் இல்லை.
— Gayathri Raguramm (@gayathriraguram) November 26, 2018 |
தாய் ஆதரவு
எனது தாயிடமும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு கூறிவிட்டு அவரது தாயை பேசச் சொல்கிறார் காயத்திரி. அவர் தாய் வீடியோவில் பேசுகையில் "என் பொண்ணு அப்படி தப்பலாம் செய்ய மாட்டாள். யாரோ வேண்டுமென்று என் மகளை பின்தொடர்ந்து வேண்டும் என்று பழி வாங்குகிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள். கடவுள் தண்டனை கொடுப்பார். காயத்திரியின் தந்தையும் தண்டிப்பார்". இவ்வாறு அவர் தெரிவித்தார் இதையடுத்து காயத்ரி ரகுராம் வீடியோவில் பேச்சை தொடர்ந்தார்.

சளி பிடித்துள்ளது
எனக்கு உடல்நிலை சரியில்லை. ஜலதோஷம், லேசான காய்ச்சல் உள்ளது. எந்த ஒரு தவறான செய்தி வந்தாலும் நம்புபவர்கள் நம்புவீர்கள். நம்பாதவர்கள் நம்பமாட்டீர்கள். நானும் எனது குடும்பமும் நன்றாக உள்ளோம். வெளியானது பொய் செய்தி மட்டுமே. என்னை குறிவைத்து இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. தகவல் கிடைத்ததும் என்னிடமே தொடர்புகொண்டு பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கலாம். எல்லோருமே எனக்கு தெரிந்தவர்கள் தான்.

என்னிடம் கேட்டிருக்க வேண்டும்
ஷூட்டிங்கை முடித்துவிட்டு எனது சக ஸ்டாரை டிராப் செய்வதற்கு வந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் போலீசார் தடுத்தனர். நான் குடித்திருந்தால், குடிச்சேன் என்று சொல்லப் போகிறேன். எனக்கு என்ன பயம் இருக்கிறது? நான் அந்த மாதிரி கேரக்டர் தான். ஆனால் தப்பு செய்யாத போது இந்த மாதிரி செய்யும் போது அது தவறான விஷயம். கடவுள் இருக்கிறார். அனைத்து செய்தி சேனல்களும் செய்தி ஒளிபரப்பு முன்பாக என்னிடம் ஒருமுறை கேட்டிருக்கலாம். மறுபக்கத்தில் கேட்டீர்கள், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். என் உடன் இருந்தவர்களிடம் கேட்டிருக்கலாம். நான் ஜலதோஷத்திற்கான மருந்து எடுத்துக் கொண்டிருந்தேன். எனவே குடிபோதையில் இருந்ததாக பரிசோதனையில் தெரிந்திருக்கும். ஆனால் நான் ரத்தப் பரிசோதனைக்கு கூட தயார். இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பேசும்போது, அவ்வப்போது ஜலதோசம் பிடித்துள்ளதை போல மூக்கை உறிஞ்சியபடி பேசினார்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications