Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏய் காரை விட்டு முதல்ல இறங்குடி".. கண்ணன் ஐஏஎஸ் மனைவியை ஒருமையில் பேசிய கே.எஸ். அழகிரியின் பேரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரியின் பேரன் ஆபாசமாக பேசியது குறித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை கே கே நகரை சேர்ந்தவர் சுபாஷ் (22). சட்டக் கல்லூரி மாணவரான இவர் தனது தங்கை பாரதியுடன் வெள்ளிக்கிழமை இரவு காரில் அசோக்நகரில் உள்ள 100 அடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கைகலப்பு

கைகலப்பு

இதைத் தொடர்ந்து கைகலப்பிலும் ஈடுபட்டதாக தெரிகிது. இந்த சம்பவம் குறித்து அசோக்நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபாஷ் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பேத்தியும் பேரனும் என தெரியவந்துள்ளது.

காரில் வந்த ஐஏஎஸ் அதிகாரி

காரில் வந்த ஐஏஎஸ் அதிகாரி

மற்றொரு காரில் வந்தது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், அவரது மனைவி ஜெயலட்சுமி என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஜெயலட்சுமியிடம் கேஎஸ் அழகிரியின் பேரன் ஆபாசமாக பேசும் வீடியோவை பாஜகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி

ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி

இதுகுறித்து அந்த வீடியோவில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி என் காரில் இடிக்க எப்படி உங்களுக்கு தைரியம் என கேட்கிறார். அதற்கு உனக்கு எப்படி தைரியம் என சுபாஷும் அவரது தங்கையும் கேட்கிறார்கள். அப்போது சுபாஷ் கெட்ட வார்த்தையால் திட்ட, ஜெயலட்சுமியோ நீ எப்படிடா என்னை கெட்ட வார்த்தையால் திட்டுவ என கேட்க, பதிலுக்கு சுபாஷும் நீ யாருடி, முதல்ல காரை விட்டு எறங்குடி என ஒருமையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒருமையில் பேசிய கே எஸ் அழகிரியின் பேரன்

ஒருமையில் பேசிய கே எஸ் அழகிரியின் பேரன்

இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம், ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசும் தனது மகனை (பேரனுடன் இருக்கும் பெண்ணை காயத்ரி தாய் என்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் தங்கை என்கிறார்கள் ) கே.எஸ் . அழகிரியின் மகள் (பேத்தி) கண்டிக்கவே இல்லை. மன்னராட்சி இப்படிதான் இருக்கும். காங்கிரஸில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லலாமா? என காயத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஜெயலட்சுமியின் கணவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் நேற்றைய தினம் தலைமைச் செயலாளரை சந்தித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+