சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்கே அண்ணாமலை ஆளுநரை பார்த்த நேரத்தில்.. இங்கே புயலை கிளப்பிய காயத்ரி.. ஓஹோ.. டெல்லிக்கு போன மெசேஜ்

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை அண்ணாமலை சந்தித்த அதே நேரத்தில் காயத்ரி ரகுராம் முக்கியமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜகவில் சீனியர் தலைவர்களுக்கும் ஜுனியர் தலைவர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்று பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது.

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தமிழ்நாடு பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். கட்சி உள் விவகாரங்களை வெளிப்படையாக ட்விட் செய்து விமர்சனம் வைத்தார்.இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர். இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சூர்யா

சூர்யா

இந்த நிலையில்தான் திருச்சி சூர்யா - டெய்சி சரண் ஆடியோ வெளியானது. பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவிற்கு - டெய்சி சரணுக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் போனில் சண்டை நடந்து இருக்கிறது. இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க அண்ணாமலை கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த விசாரணை தொடங்கிய 24 மணி நேரத்தில் இவர்கள் இருவரும் சமாதானம் ஆகி உள்ளனர். அப்படி பாஜகவில் என்னதான் நடந்தது? இதையடுத்து இருவரும் சமாதானம் ஆகி, இது எங்களுக்கு இடையில் நடந்த தனிப்பட்ட உரையாடல். இதை நாங்கள் லீக் செய்யவில்லை. நாங்கள் இருவருமே வெளியே விடவில்லை. எனவே கட்சி என் மீது நடவடிக்கை. எடுக்கட்டும் எந் விதமான நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்கள் குடும்பம் நட்பான குடும்பம். என் மனைவி கிறிஸ்துவர். என் மனைவியும் டெய்சியும் நெருங்கிய நண்பர்கள்தான், என்று திருச்சி சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக கேட்கபட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறோம். எங்கள் தரப்பு விளக்கத்தை சொல்லி இருக்கிறோம்.நாங்கள் அக்கா தம்பி போன்றவர்கள். அவர் என்னை தொடக்கத்தில் அப்படிதான் கூப்பிட்டார். இனியும் அப்படியே பயணிப்போம், எங்களுக்கு கட்சியே முக்கியம். இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்.. கட்சிக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம், என்றுகுறிப்பிட்டனர் .

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த விவகாரமும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட காரணம் என்று கூறப்பட்டது. ஏனென்றால் இந்த விவாகரத்தில் காயத்திரி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இது பற்றி தேசிய தலைமையிடம் பேசுவேன் என்று காயத்ரி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், தேசிய தலைமையிடம் இதை பற்றி பேசுவேன். இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருக்கிறேன். காசி தமிழ் சங்க மீட்டிங்கிற்கு என்னை கூப்பிடவில்லை. என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கு இடையில்தான் இன்று ஆளுநரை அண்ணாமலை நேரில் சந்தித்தார். தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து இன்று நடந்த மீட்டிங்கில் அண்ணாமலை ஆளுனருடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

பாஜக உட்கட்சி

பாஜக உட்கட்சி


பாஜக உட்கட்சி மோதல் பற்றி இவர்கள் பேசி உள்ளனர். இந்த நிலையில் காயத்ரி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் , நான் சில நேர்காணல்களைப் பார்த்தேன். நான் திருச்சி சூரியா ஆடியோவை கசியவிட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் முதலில் உரையாடலைப் பதிவு செய்தவர் நான் அல்ல. அதே போல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை. பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை வெகு காலத்திற்கு முன்பே பெற்று உரையாடலைக் கேட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவும் கூறினார்.

ஆளுநர்

ஆளுநர்

மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்பதை அண்ணாமலை ஜி கண்டுபிடிப்பது எளிது. சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகின்றனர், அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்துள்ளேன். திருச்சி சூரியா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்து அந்த நபர் மீது மாநில தலைவர் திரு. கே.அண்ணாமலை ஜி நடவடிக்கை எடுப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.. உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உணர்வுபூர்வமாக ஆதரவளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, மற்றும் தமிழ்நாடு மக்களின் அதீத அன்பிற்கு நான் தலைவணங்குகிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். அண்ணாமலை ஆளுநரை சந்தித்த அதே நேரம் இவர் டெல்லி பாஜக தலைவர்களை.. ஜெ பி நட்டா போன்ற தேசிய தலைவர்களை டெக் செய்து புகார் வைத்துள்ளார்.

English summary
Gayathri releases a statement amid Annamalai meeting Governor R N Ravi today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X