பியூட்டி பார்லர் போன காயத்ரி.. ஃபுல்மேக்கப்பில் போலீஸில் சொன்ன பிளஸ் பாயிண்ட்! கேட்டாலே தலை சுத்தும்
சென்னை: ஆடம்பர வாழ்க்கைக்கும், அதீத மேக்கப் மோகத்திற்கும் அடிமையாகி கிடந்துள்ளார் அந்த பெண்.. எக்காரணத்தை கொண்டும் ஆடம்பரத்தையும் மேக்கப்பையும் கைவிடக்கூடாது என்பதற்காக கைவரிசையும் காட்ட துணிந்துள்ளார். இந்த "கில்லாடி" தம்பதியரின் சம்பவத்தை கேள்விப்பட்டு கர்நாடக மாநிலமே ஆடிப்போய் கிடக்கிறது. அதிலும் போலீஸ் விசாரணையில் காயத்ரி அளித்த வாக்குமூலம் அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் பெங்களூரு குவேம்பு லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள்.. இவர் சமீபத்தில் தேவசந்திரா மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார்..

அந்த திருவிழாவில் தன்னுடைய 30 கிராம் தங்க செயினை யாரோ திருடி விட்டார்கள்.. இதனால் பதறிப்போன லட்சுமி அம்மாள், உடனே இதுகுறித்து கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் புகார் தந்தார்..
மேக்கப் காயத்ரி
உடனே களத்தில் இறங்கிய போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதில் கிடைத்த துப்புகளை வைத்து, கம்மசந்திரா பகுதியைச் சேர்ந்த காயத்ரி மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.. அப்போதுதான் பகீர் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது..
அதாவது மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த தம்பதி.. ஆரம்பத்தில் கோவில் திருவிழாக்களில் பொம்மைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்கள்.. ஆனால், உழைத்து வாழ்வதை விட, குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் வந்துவிட்டது. அதனால் திருட்டு தொழிலை தம்பதி இருவரும் கையில் எடுத்துள்ளனர்..
இதில் காயத்ரியின் திருட்டு பாணி சற்று வித்தியாசமானது.. எப்போதுமே காயத்ரிக்கு மேக்கப் போடுவது, அலங்காரம் செய்வது என்றால் கொள்ளை பிரியமாம்.
பியூட்டி பார்லர் - மேக்கப்
மேலும், தான் ஒரு திருடி என்று யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, ஒவ்வொரு திருட்டுக்கு முன்பும் காயத்ரி பியூட்டி பார்லர் சென்று தன்னை முழுமையாக மெருகேற்றி கொள்வாராம்... ஒருமுறை அழகு நிலையத்திற்கு சென்றால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை தாராளமாக செலவு செய்வாராம்..
இப்படி மாதத்திற்கு மேக்கப்பிற்காக மட்டுமே சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்ததாக போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, எப்போதுமே காஸ்ட்லி பட்டு சேலைகள், மார்டன் டிரஸ்கள், கையில் ஐபோன் என படு மாடர்னாக வலம் வரும் காயத்ரியை, திருவிழா கூட்டத்தில் பார்க்கும் யாருமே, திருடி என்று சந்தேகிக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்க தன்னுடைய லுக்கையே மாற்றி கொண்டு, கூட்ட நெரிசலில் புகுந்துவிடுவாராம்..
பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகளை லாவகமாக அபேஸ் செய்துவிடுவதுதான் இவரது அன்றாட வேலையாக இருந்து வந்துள்ளது..
398 கிராம் தங்க நகைகள்
இப்போது கைது செய்யப்பட்ட இந்த ஜோடியிடமிருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 398 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் இந்த தம்பதிக்கு எதிராக ஏற்கனவே ஹன்சூர், சிக்பல்லாபூர், தொட்டபெல்லாபூர் உள்ளிட்ட பல போலீஸ் ஸ்டேஷன்களில் கேஸ் உள்ளதாம்.. இவர்கள் பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ள பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது..
தற்போது இந்த ஜோடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் பாயிண்ட் காயத்ரி
இதில் ஹைலைட் என்னவென்றால், "ஃபுல் மேக்கப் போட்டுட்டு, காஸ்ட்லி புடவை அணிந்தால் யாருக்கும் சந்தேகம் வராது. நல்ல அலங்காரத்துடன் கோவிலுக்கு சென்றால் பெண்கள் நம்பிக்கை காட்டுவார்கள். அதைப் பயன்படுத்தி நகை திருடினேன்.. அழகு தான் எனது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சார்" என்று வாக்குமூலத்தின்போது, போலீசாரிடம் பெருமையாக சொன்னாராம் காயத்ரி...!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications