Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை நங்கநல்லூர் வந்த மாநகராட்சி கமிஷ்னர் ராதாகிருஷ்ணன்.. அதிரடி ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை நங்கநல்லூரில் இரண்டு எருமைகள் 63 வயது முதியவரைக் கொன்ற இடத்தில் கால்நடை உரிமையாளர்களுடன், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.

அப்போது மாடுகளை ஏன் கண்டபடி கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டதோடு, கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.

GCC Commissioner Radhakrishnan came to Chennai Nanganallur: Warning to cattle owners

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோட்டை சேர்ந்த 63 வயதாகும் சந்திரசேகர் , ரயில்வே தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், செவ்வாய்கிழமை மாலை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் 2 எருமை மாடுகள் சண்டைபோட்டு கொண்டபடி ஓடி வந்திருக்கின்றன. அந்த மாடுகள் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து, அங்கு சாலையை கடந்து செல்வதற்காக நின்ற சந்திரசேகரை முட்டியதுடன், ஒன்றுக்கொண்டு முட்டி மோதி கொண்டன.

இதில் மாடுகளுக்கு நடுவில் சிக்கிய சந்திரசேகர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் மாடுகளை விரட்டிவிட்டு சந்திரசேகரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நங்கநல்லூரில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே மாடுகள் முட்டி சிலர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் மாடுகள் முட்டி சிலர் இறந்து இருக்கிறார்கள். சிலர் மாடுகளால் விபத்தில் சிக்கி இறந்துபோய் இருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் நடந்து சென்ற மூன்று பெண்கள் மாடுகள் முட்டியதில் படுகாயம் அடைந்தனர். அண்மையில் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த முதியவர் ர் மாடு முட்டி பலியானார். சென்னையில் சாலைகள் தான் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இப்படிப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் மாடுகளை அவிழ்த்துவிடும் மாட்டின் உரிமையாளரை சிறையில் அடைத்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மாடுகளை ஊருக்கு வெளியில் வைத்து வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே இரண்டு எருமைகள் 63 வயது முதியவரைக் கொன்ற இடத்தில் கால்நடை உரிமையாளர்களுடன், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் இன்று கலந்துரையாடினார். அப்போது மாடுகளை ஏன் கண்டபடி கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டதோடு, கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்தார்.

இதனிடையே சென்னை நங்கநல்லூரில் மாடுகளால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த நிலையில், ஒரு எருமை மாடு உட்பட 14 கால்நடைகளை சென்னை மாநகராட்சி பிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலையே பெரும்பாலான கால்நடைகளை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இதுபற்றி மாநகாட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் கடந்த ஆண்டு, 4237 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 92.63 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2024ல், முதல் 8 நாட்களில், 42 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, ​​தெரு மாடுகளுக்கு முதல் முறை அபராதம், 2,000 ரூபாயாகவும், பராமரிப்பு தொகை, 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் இருந்து, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் பராமரிப்பு கட்டணத்துடன், 5,000 ரூபாய் அபராதம் உரிமையாளர் செலுத்த வேண்டும். அதே கால்நடை மீண்டும் பிடிபட்டால், மாநகராட்சி 10,000 ரூபாய் வசூலிக்கிறது மேலும் முதல் நாளில் இருந்து பராமரிப்புக்காக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பெரும்பாலான உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி கால்நடைகளை எடுத்துச் செல்கிறார்கள்" என்றார்.

இதுபற்றி நெட்டிசன்கள் கூறுகையில், இது போன்ற மாடுகளின் அச்சுறுத்தல்களால் ஒருவர் கொடூரமாக கொல்லப்படும் போது, ஒவ்வொரு சம்பவத்திலும் , கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் பல முறை இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறார்? கால்நடைகள் நகர எல்லைக்கு வெளியே இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக யாரும் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்குத் தேவையான இடத்தை கொடுக்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், நிலைமை மிகவும் வருத்தமாக உள்ளது. கால்நடைகளால் உயிரை மக்கள் இழக்கும் நிலையில், மாட்டின் உரிமையாளர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் என்ன செய்கிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+