ஜென்Z பசங்களை இந்த விஷயத்தில பாராட்டியே ஆகணும்.. ஏன் தெரியுமா..?
இந்தியாவில் சட்டப்படி மது அருந்தும் வயதை எட்டிய இளைஞர்கள், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர், மது அருந்தும் முறையை முற்றிலுமாக மாற்றி வருகின்றனர். இந்த மாற்றம் தொழில்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மதுபான நிறுவனங்கள் அதன் விற்பனையை அதிகரிக்க பல உக்திகளை கையாளும். ஆனால் ஜென்Z தலைமுறையினரால் செய்வதறியாது நிற்கின்றனர்.
இது நாள் வரையில் பேபி பூம்பர்ஸ் முதல் மில்லினியல்ஸ் வரையிலான தலைமுறையினர் மதுபானத்தை அதிகமாக விரும்பி அதிகளவில் நுகர்ந்து வந்தனர். இதனால் மதுபான நிறுவனங்களுக்கு புதுபுது பிராண்டுகளை அறிமுகம் செய்து வர்த்தகம் செய்ய ஏதுவான சூழ்நிலை உருவாக்கியது. ஆனால் பல விஷயங்களில் கடுமையான விமர்சனை எதிர்கொள்ளும் ஜென்Z தலைமுறையினர் மதுபானம் அருந்துவதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா என உலகம் முழுவதும் ஜென்Z தலைமுறையினர் மதுபானம் அருந்துவதில் விலகியே இருப்பதாக சந்தை தரவுகள் கூறுகிறது.

ஜென்Z தலைமுறை
ஜென்Z தலைமுறையினர் மதுவை முழுமையாக தவிர்க்கவில்லை, அதற்கு பதிலாக அதை எப்படி, எப்போது, எவ்வளவு அருந்த வேண்டும் என்பதை மறுவரையறை செய்து வருகின்றனர். ஜென் Z இளைஞர்கள் மதுபானம் அருந்துவதை முழுமையாக கைவிடவில்லை, மதுபான அளவைக் கடுமையாக குறைத்துள்ளனர். இதேவேளையில் மதுபான தேர்வு முறையையும் மாற்றியுள்ளனர். இதுதான் தற்போது மதுபான நிறுவனங்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
உலகளாவிய டிரெண்ட்
உலகம் முழுவதும் இளம் தலைமுறையினர் மது அருந்துவதை குறைத்து வருகின்றனர். சிலர் முழுமையாக விலகவும் தொடங்கியுள்ளனர். உதாரணமாக அமெரிக்காவில் கனபீஸ், வெல்னஸ் டிரெண்ட், பிட்னஸ் டிரெண்ட் மற்றும் மது இல்லாத பானங்கள் (non-alcoholic beverages) போன்ற மாற்று விருப்பங்களை அதிகளவில் விரும்ப துவங்கியுள்ளனர்.
இதைவிட முக்கியமாக அமெரிக்காவில் தற்போது காஃபி மற்றும் டீ கடைகள் அதிகரித்துள்ளது, இதற்கு காரணமும் ஜென்Z தலைமுறையினர் தான். சொல்லப்போன்ற இந்திய டீ வகைகள், இந்தியாவின் பாரம்பரியமான சுவையிலேயே பல கடைகள் கொடுக்க துவங்கியிருக்கும் காரணத்தால் ஜென்Z தலைமுறையினர் அதிகம் விரும்பி இத்தகைய கடைகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
ஐரோப்பாவில் ஒரு படிக்கு மேல் சென்று அதிகப்படியான மதுபான விலைகள் காரணமாக பார் கலாச்சாரம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இப்படி பல வழிகளிலும், பல காரனத்திற்காகவும் இளம் தலைமுறையினர் மத்தியில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது. இது காலம் காலமாக மதுபான தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்களை பெரிய அளவில் பாதித்து வருகின்றன. இந்தப் போக்கு உலக அளவில் மதுபான தொழில்துறைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நிலை
ஆனால், இந்தியா வேறு பாதையில் செல்கிறது. இந்தியாவில் மதுபான சந்தை இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 1997 முதல் 2012 வரை பிறந்த ஜென் Z இளைஞர்கள், முந்தைய மில்லினியல் தலைமுறையினரை விட 20 சதவீதம் குறைவாக மது அருந்துகின்றனர்.
பேபி பூம்மர் மூலம் பெரும் வர்த்தகத்தை பார்த்து வந்த இந்திய மதுபான நிறுவனங்கள் தற்போது ஜென்Z தலைமுறையினர் மூலம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்திய ஜென்Z தலைமுறையினர் மதுவை முழுமையாக விட்டுவிடவில்லை, விருப்ப தேர்வு மாறியுள்ளது. அதாவது ப்ரீமியம் மதுபானங்கள், Sober பாணங்களை அதிகளவில் தேர்வு செய்ய துவங்கியுள்ளனர் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
என்ன காரணம்?
இந்த மாற்றத்துக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஜென்Z தலைமுறையினரிடம் முதலாவதாக, ஆரோக்கியம் முக்கியம் என்ற உணர்வு அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, மனநலன் மற்றும் உளவியல் நலன் மீதான அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். மூன்றாவது, மதுபானங்களின் அதிகப்படியான விலை (வரி மூலம் அதிக விலை).
இந்தக் காரணங்களால் 'sober-curious' எனப்படும் மது இல்லாத மாற்று பானங்களை இந்தத் தலைமுறை அதிகம் வரவேற்கிறது. பலர் மது அருந்துவதை விரும்பினாலும், அவ்வப்போது மட்டுமே அருந்துகின்றனர் அல்லது அளவோடு நிறுத்துகின்றனர். இப்போ சொல்லுங்க ஜென்Z தலைமுறையை பாராட்டலாமா? வேண்டாமா?
ஜென்Z தலைமுறையை கவர்வதற்காகவே தற்போது மதுபான நிறுவனங்கள் சோபர் பானங்களை தயாரிக்கும் பனியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதேபோல் மாஸ் மார்கெட்-ஐ குறிவைக்காமல் ப்ரீமியம் மார்கெட்டை குறிவைக்க துவங்கியள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications