Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டார்கெட் செய்யப்படும் மசூதிகள்.. வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கனும்" -மமக பொதுக்குழுவில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபர் மசூதியை தொடர்ந்து ஞானவாபி மசூதி, ஈத்கா மசூதி குறிவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி எந்த உத்தரவுகளையும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நேற்று நடைபெற்ற மமக பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் பங்கேற்றது மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் 1992 டிசம்பர் 6ல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பயங்கரவாதச் செயல் மூலம் இடிக்கப்பட்டது. பின்னர் சட்டப்படியல்லாத ஒரு வினோதமான தீர்ப்பு வழியாக பாபரி மஸ்ஜித் இருந்த இடம் ராமர் கோவில் கட்ட ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. இவை சிறுபான்மை மக்களின் மனதில் அவநம்பிக்கையை விதைப்பதாக அமைந்தது.

General commitee of Manithaneya Makkal Katchi passed resolution to save Mosques in India

பாபரி மஸ்ஜிதை இடித்து கட்டிய கோவிலின் திறப்பு விழாவில் நாட்டின் பிரதமரே பூசாரியாகச் செயல்பட்டுள்ளார். விடுதலை பெற்ற பிறகு அயோத்தி ராமர் கோவில் பாணியிலான சோமநாதர் கோவில் திறப்பு விழாவில் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் பங்கு கொள்வது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அன்றைய பிரதமர் நேரு அவரைக் கடிந்துக் கொண்டார். பள்ளிவாசலை இடித்து கட்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கு கொண்டது அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் என்பதால் இதற்கு இப்பொதுக்குழு வருத்தத்தையும் வேதனையையும் பதிவு செய்கிறது.

கியனானவாபி, மதுரா ஈத்கா பள்ளிவாசல்கள்: வாரணாசியில் உள்ள பழமையான ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உளு (அங்கத் தூய்மை) செய்யும் தடாகத்திற்கு அருகில் பாதாளப் பகுதியில் அமைந்துள்ள வியாஸ் மண்டபத்தில் சிவன் வழிபாடு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஞானவாபி பள்ளிவாசலை ஆக்கிரமிக்க நடத்தப்படும் சதியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையை இப்பொதுக்குழு கருதுகின்றது.

வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்திற்கு எதிரானது. ஆகவே உச்ச நீதிமன்றம் இதில் நேரடியாகத் தலையிட்டு இவ்வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

குதுப்மினார் அருகே உள்ள பள்ளிவாசல் இடிப்பு, பகையை வளர்க்கும் பாசிச அதிகார வர்க்கத்தின் கொடுஞ்செயல்: தலைநகர் டெல்லியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குதுப்மினார் அருகில் கட்டப்பட்ட, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "அகுஞ்சி மஸ்ஜித்" என்னும் பள்ளிவாசல் மற்றும் அந்தப் பள்ளிவாசல் வளாகத்தினுள் 25 ஆதரவற்ற குழந்தைகள் பயிலும் "பஹருலுள் உலூம்" என்ற மதரஸா மற்றும் அங்கிருந்த அடக்கத்தலங்கள் யாவும் 10 புல்டோசர்களை கொண்டு ஒன்றிய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி துறையின் கீழ் இயங்கும், தில்லி வளர்ச்சி ஆணையத்தினால் இடித்து தரைமட்டமாக்கிய பாசிச அதிகார வர்க்கத்தின் கொடுஞ்செயலை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்குப் பாதுகாப்பு நல்கிடுக: 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991, பாபர் பள்ளிவாசல் பிரச்சினை தவிர்த்து, ஆகஸ்ட் 15, 1947 க்கு முன்னர் வரையில் இருந்த எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வழிபாட்டுத் தலங்கள் எந்த விதத்திலும் பிற மதத்தவர்கள் மற்றும் அம்மதத்தின் உட்பிரிவுகளை சார்ந்தவர்களால் கூட மறு சீரமைப்பு என்கிற பெயரில் கூட சேதப் படுத்திட முடியாது. அது தண்டனைக்குரியது எனவும் இது தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்றும் கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை மதிக்காமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு அல்லது இடிப்பு நிகழ்வுகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+